கில்லி ரீ ரிலீஸ் வசூலுக்கு எல்லாம் வேட்டு.. பாகுபலி தி எபிக் அட்வான்ஸ் புக்கிங் வசூலே இத்தனை கோடியா?

சென்னை: ஒரு படத்தை 2.30 மணி நேரத்துக்கு மேலேயே தியேட்டரில் உட்கார்ந்து ரசிகர்களால் பார்க்க முடியாது என சொல்லிக் கொண்டிருந்த நிலையில், அனிமல், புஷ்பா 2 படங்கள் சுமார் 3.30 மணி நேரம் வரை திரையரங்குகளில் ரசிகர்களை கட்டிப் போட்டன. இந்நிலையில், 3.44 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக பாகுபலி தி எபிக் படம் நாளை வெளியாகிறது.

அக்டோபர் 31ம் தேதி ஒட்டுமொத்தமாக தமிழிலேயே சுமார் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. விஷ்ணு விஷாலின் ஆர்யன், ரியோ ராஜின் ஆண் பாவம் பொல்லாதது, அஜித் குமாரின் ரீ ரிலீஸ் படமான அட்டகாசம் என பல படங்கள் வரிசை கட்டி நின்றாலும், பாக்ஸ் ஆபீஸில் ராஜமெளலியின் பாகுபலி தி எபிக் படம் தான் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Baahubali The Epic movie Advance Booking on Fire Opening Day Box Office will be very huge
Photo Credit:

பாகுபலி படத்தின் முதல் பாகம் மற்றும் 2ம் பாகத்தை ஒன்றாக இணைத்து ஒரே படமாக ரீ ரிலீஸ் செய்யும் முயற்சியில் ராஜமெளலி இறங்கியுள்ளார். நாளை வெளியாகவுள்ள இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் டிக்கெட் புக்கிங்கே மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளதாக கூறுகின்றனர்.

மீண்டும் தியேட்டரில்: வாழ்க்கையில் ஒருமுறையேனும் இந்த காவியத்தை பார்த்துவிட வேண்டும் என பாகுபலி படம் வெளியாவதற்கு முன்பு ப்ரோமோஷன் செய்யப்பட்டது. படம் வெளியாகும் போது, இந்த படம் ஃப்ளாப் ஆனால், அவ்வளவு தான் என ராஜமெளலி ரொம்பவே பயத்தில் இருந்தார். ஆனால், படம் வெளியாகி ஒரு வாரத்தில் பெரிதளவில் பிக்கப் ஆகி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அதன் 2ம் பாகம் வெளியாகி 1800 கோடி வசூலை டோலிவுட்டில் வசூல் செய்து பாலிவுட் பிரபலங்களையே பிரமிக்க வைத்தது. இந்நிலையில், அந்த 2 படங்களின் மேஜிக்கையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் விதமாக பாகுபலி தி எபிக் படம் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அசுர வேகத்தில் அட்வான்ஸ் புக்கிங்: புதிதாக வரும் படங்கள் மொத்தமாகவே 10 கோடி வசூல் செய்ய தடுமாறி வரும் சூழலில் முதல் நாளுக்கான அட்வான்ஸ் புக்கிங்கிலேயே பாகுபலி தி எபிக் படத்தை பார்க்க ரசிகர்கள் சுமார் 10 கோடிக்கும் அதிகமான வசூல் வரும் அளவுக்கு டிக்கெட் புக்கிங் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நார்த் அமெரிக்காவில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு அட்வான்ஸ் புக்கிங் ஆகியிருப்பதாகவும் இந்தியாவில் இதுவரை 5 கோடிக்கு அட்வான்ஸ் புக்கிங் நடந்திருப்பதாக கூறுகின்றனர். முதல் நாள் ஓபனிங்கே 20 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவி தேஜாவின் மாஸ் ஜத்தாரா படமும் நாளை தெலுங்கில் வெளியாகும் நிலையில், அந்த புதுப்படத்துக்கே பெரிய போட்டியாக பாகுபலி படம் அமைந்துள்ளது என்கின்றனர்.

கில்லியை மிஞ்சும்: விஜய்யின் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 50 கோடி வரை வசூல் செய்த நிலையில், பாகுபலி தி எபிக் திரைப்படம் அதிகபட்சமாக 100 கோடி வரை வசூல் செய்யும் என கணிப்புகள் கிளம்பி உள்ளன. 2015ல் வெளியான பாகுபலி படத்தை 10 ஆண்டுகள் கழித்து ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாட காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X