»   »  63 வருட தேசிய விருதுகள் வரலாற்றில் 'பாகுபலி' படைத்த சாதனை

63 வருட தேசிய விருதுகள் வரலாற்றில் 'பாகுபலி' படைத்த சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: 63 வருட தேசிய விருதுகள் வரலாற்றில், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்குத் திரைப்படம், என்ற பெருமை பாகுபலிக்கு கிடைத்துள்ளது.

Select City
Buy Baahubali - The Beginning (Part I) (U/A) Tickets

தெலுங்குப் படங்கள் தேசிய விருதை வென்றாலும், சிறந்த படம் என்ற பிரிவில் இதுவரை எந்த ஒரு படமும் விருதை வென்றதில்லை.


இந்நிலையில் ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம் சிறந்த படம் மற்றும் சிறந்த விஷுவல் எப்பெக்ட்ஸ் என 2 தேசிய விருதுகளை, இந்த ஆண்டு வென்று சாதனை படைத்துள்ளது.


Baahubali the first Telugu film won National Award

தேசிய விருதுகள்


தேசிய விருதுகளுக்கும், தெலுங்குப் படங்களுக்கும் ரொம்ப தூரம் என்று சொல்லும் அளவுக்கு தெலுங்குலகின் நிலை இருந்தது. பச்சை, மஞ்சள், சிகப்பு என அடிக்கிற கலரில் டிரெஸ் போட்டுக்கொண்டு கத்தரி வெயிலில் ஹீரோவும், ஹீரோயினும் ரொமான்ஸ்+டான்ஸ் செய்வது. 2,3 காட்சிகளுக்கு ஒருமுறை தேவையில்லாத பாடல் காட்சிகள், பஞ்ச் வசனங்கள் மற்றும் ஹீரோயிசம் போன்ற காரணங்களால் தேசிய விருது என்பது தெலுங்குப் படங்களுக்கு இதுவரை எட்டாக்கனியாகவே இருந்தது.


ஓடுகின்ற டிரெய்னை


அதிலும் ஓடுகின்ற டிரெய்னை சுண்டு விரலால் நிறுத்துவது, டிரெயின் எவ்வளவு தூரத்தில் சென்றாலும் சரியாக அதன்மேல் குதிப்பது என்று தெலுங்கு ஹீரோக்களின் அட்டகாசங்களுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டிருந்தது. கமர்ஷியல் படங்கள் என்கிற பெயரில் பணத்தையும், படத்தையும் ஒருசேர வீணடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் சில காலமாக தெலுங்குத் திரையுலகில் சில, பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.


பிரமோத்சவம், பாகுபலி


பிரமோத்சவம், பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற படங்களின் மூலம் தற்போது கதை, படைப்பு என இரண்டிலுமே தெலுங்குப் படைப்பாளிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.மேலும் கமர்ஷியல் மசாலாக்களில் இருந்தும், தெலுங்குலகம் தற்போது மீள ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றத்தின் அறிகுறியாக தேசிய விருதுகளை இந்தாண்டு தெலுங்குப் படங்கள் வென்றுள்ளன.


Baahubali the first Telugu film won National Award

தெலுங்குப் படங்கள்


1954 தொடங்கி 2016 வரையிலான தேசிய விருதுகளில் இதுவரை எந்த ஒரு தெலுங்குத் திரைப்படமும், சிறந்த படம் என்ற பிரிவில் தேசிய விருதை வென்றதில்லை.இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த பாகுபலி இந்த ஆண்டின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.


முதல் தேசிய விருது


இதன்மூலம் தெலுங்குப் படங்கள் இதுவரை தேசிய விருதைக் கைப்பற்றியதில்லை, என்ற கூற்றை பாகுபலி முறியடித்து விட்டது.இதனால் பாகுபலி குழுவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தெலுங்குத் திரையுலகமும் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.


Baahubali the first Telugu film won National Award

மகிழ்ச்சி கலந்த வருத்தம்


தேசிய விருதை வென்றாலும் பாகுபலி குழுவினர் தற்போது வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் என்னவென்று விசாரித்தால் பாகுபலி 2 வில் ஒருசில காட்சிகள் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லையாம்.இதனால் மீண்டும் அந்தக் காட்சிகளை எடுக்க ராஜமௌலி திட்டமிட்டு வருகிறாராம். இதற்கு ஆகும் பொருட்செலவு ஒருபக்கம் இருக்க, மறுபடியும் கடினமான காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்குமே, என்று நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்களாம்.

English summary
The first Telugu film, Winning National Award credit goes to Rajamouli's Baahubali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil