»   »  லண்டனில் பிரிமியர் முடிந்ததும் ஜப்பானில் வெளியாகிறது டிஜிட்டல் பாட்ஷா!

லண்டனில் பிரிமியர் முடிந்ததும் ஜப்பானில் வெளியாகிறது டிஜிட்டல் பாட்ஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத வெற்றிப் படமான பாட்ஷா படம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புத்தம் புதிதாக வெளியாகவிருக்கிறது.

அண்மையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் பதிப்பை சத்யம் திரையரங்கில் சிறப்புக் காட்சியாக போட்டுக் காண்பித்தார்கள். படம் பார்த்த அத்தனைப் பேரும், ஏதோ புதிய ரஜினி படம் ஒன்றைப் பார்த்த திருப்தியில் ஆடித் தீர்த்தார்கள்.

Baasha digital version on February 25th

இப்போது படத்தை உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

அதற்கு முன் லண்டனில் வரும் பிப்ரவரி 17-ம் தேதி சிறப்புக் காட்சி ஒன்றைத் திரையிடத் திட்டமிட்டுள்ளனர்.

அந்தக் காட்சி முடிந்ததும் வரும் 25-ம் தேதி உலகம் முழுவதும் பாட்ஷா மறு வெளியீடு செய்யப்படுகிறது.

Baasha digital version on February 25th

குறிப்பாக ரஜினிக்கு அதிக ரசிகர்கள் உள்ள ஜப்பானில் அதிக அரங்குகளில் பாட்ஷா வெளியாக உள்ளது.

பாட்ஷா படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். மும்பை டான் பாட்ஷா, சென்னை ஆட்டோ ட்ரைவர் மாணிக்கம் என இரு தோற்றங்களில் ரஜினி நடிக்க, அவருக்கு ஜோடியாக நக்மா நடித்திருந்தார். வில்லன்களாக ரகுவரன், தேவன், ரஜினியின் நண்பராக ஜனகராஜ், தந்தையாக விஜயகுமார் நடித்திருந்தனர். தேவா இசையமைத்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பன் திரைக்கதை எழுத, பாலகுமாரன் வசனம் எழுதியுள்ளார். சத்யா மூவீஸ் தயாரித்த படம் இது.

English summary
Superstar Rajinikanth's Baasha digital version will be released on February 25th worldwide.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil