அடேய் யாருடா நீங்க...பாட்ஷா படத்தையும் விட்டு வைக்காம இப்படி கலாச்சிருக்கீங்க
சென்னை : சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களின் சமூக வலைதள பக்கங்களில் ரீல்ஸ் போடுவது அதிகரித்து வருகிறது. ஹிட்டாகி, டிரெண்டிங்கில் உள்ள பாடலுக்கு நடனமாடுவது, ரீல்ஸ் போடுவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கும் லைக்குள் குவிகின்றன.
இது ஒரு பக்கம் வரவேற்பை பெற்றாலும், ரீ கிரியேட் செய்பவர்களை விட ஒரு பாடலை அல்லது படத்தை ட்ரோல் செய்பவர்களுக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். அப்படி சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிரபல பாடல்களை வெச்சு செய்து வருகிறது ஒரு குரூப்.
விக்கல்ஸ் என்ற யூட்யூபினர் 90 களில் ஹிட்டான பல பாடல்களை செமையாக கலாச்சு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றதுடன் வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகின்றனர்.

நிலவை கொண்டு வா
சமீபத்தில் வாலி படத்தில் தேவா இசையில் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன் இணைந்து பாடிய, நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை பாடல் ரெக்கார்டிங்கை வேறு விதமாக உருவாக்கி, பலரின் கவனத்தையும் ஈர்த்தனர். இந்த வீடியோவை அந்த படத்தின் டைரக்டரான எஸ்.ஜே.சூர்யாவே ரசித்து, ட்விட்டரில் ரியாக்ட் செய்திருந்தார்.

ரஜினியையும் விட்டு வைக்கலியா
இந்நிலையில் ரஜினியின் மாஸ் படமான பாட்ஷா படத்தின் பாடலையும் அவர்கள் கலாச்சுள்ளனர். இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.ரஜினி படத்தையும் விட்டு வைக்கலியா என பலர் ஆதங்கத்துடன் கமெண்ட்டும் செய்து வருகின்றனர்.

ரஜினியின் மாஸ் ஹிட் படம்
டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன், ஜனகராஜ், விஜயக்குமார், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்து 1995 ம் ஆண்டு வெளியான படம் பாட்ஷா. ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றியை பெற்று தந்த படம் இது தான். கிட்டதட்ட 15 மாதங்கள் தியேட்டர்களில் ஓடிய படம்.

மாஸ் ஹிட் பாடல்கள்
இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேட் செய்யப்பட்ட இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். வைரமுத்து பாட்டெழுதி இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற 7 பாடல்களும் மாஸ் ஹிட். இதில் தங்கமகன் பாடலை தவிர மற்ற 6 பாடல்களையும் எஸ்பிபி தான் பாடி இருந்தார். பாட்ஷா படத்திற்கு ரஜினியின் பெயருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டைட்டில் கார்டு தான் தற்போது வரை ரஜினி படங்கள் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

என்னய்யா இப்படி கலாய்ச்சிருக்கீங்க
பாட்ஷா படத்தின் தீம் சாங்காக பாட்ஷா பாரு பாடல் உருவாக்கப்பட்டது. இந்த பாடலை தான் விக்கல்ஸ் தற்போது கலாய்ச்சு உள்ளனர். இந்த பாடலின் ஆரம்பத்தில் வரும் பாட்ஷா என்ற பெயரை மிக சாஃப்டாக சொல்லும் படி கோரஸ் டீமிடம் தேவா சொல்வது போலவும், அதற்கு அவர்கள், சார்...உடம்பெல்லாம் சிலிர்க்கிறது என்கிறார்கள். அதற்கு இசையமைப்பாளர் இனிமே தான் உனக்கு உண்மையா சிலிர்க்க போகுது என்கிறார். என்ன சொல்றீங்க என கேட்க, இனி தானே நீ நாய் குரைக்கிற போல சத்தம் எல்லாம் கொடுக்கனும் என்கிறார்.

யாருடா நீங்க எல்லாம்
அப்போது எஸ்பிபி குரலில் ஒருவர், பாட்ஷா பாரு பாடலை பாடலை இவர்கள் வயலின் வாசிப்பது போல் நடிப்பது அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. செம...சூப்பர்...இதுக்கு மேல சிரிக்க முடியலடா. ரஜினியின் மாஸ் படங்களுக்கு எல்லாம் மாஸ் பாட்ஷா. அந்த படத்தின் தீம் சாங்கையே இப்படி கலாய்ச்சிருக்கீங்களே. யாருடா நீங்க எல்லாம் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











