»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

ஸ்பைடர் மேனின் ஸ்டைல் சுடப்பட்டு பாபா படததில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து வெளியிட்ட செய்தியைப் படித்த நமது வாசகர்களில் ஒருவரான திரு. சுப்பு புதியதகவல் ஒன்றையும் கூறியுள்ளார்.

இந்த ஸ்டைல் ஒரிஜினலாக மைக்கேல் ஜாக்சனுக்கு சொந்தமானதாம். அதை அவர் காப்பி ரைட் கூட செய்து வைத்துள்ளார் என்கிறார் சுப்பு. இதற்குஆதாரமாய் ஜாக்சனின் புகைப் படங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த முத்திரையைப் பயன்படுத்த ஜாக்சன்- ஸ்பைடர் மேன் தயாரிப்பாளர்கள் இடையே இது தொடர்பாக ஏதாவது ஒரு ஒப்பந்தம் இருக்கலாம் என்றுதெரிகிறது.

ஆக, சர்வதேச எண்டர்டெய்ன்மென்ட் உலகத்தின் இரு மிகப் பெரிய அடையாளங்களான மைக்கேல் ஜாக்சன் மற்றும் ஸ்பைடர் மேனில் இருந்து இந்த முத்திரைசுடப்பட்டிருக்கிறது.

ஆனால், இது மானைக் குறிக்கும் ம்ருகி முத்திரை என்று பத்திரிக்கைகளால் எழுதப்பட்டு வருகிறது.

பாபா சூட்டிங் ஸ்பாட்டுக்குள் நுழைய நிருபர்கள் உள்ளிட்ட அன்னியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால்இந்த சுட்ட ஸ்டைல் விவகாரம் குறித்து அவர்களிடம் கருத்து அறிய முடியவில்லை.

ஜாக்சனின் ம்ருகி முத்திரை படங்கள்:

மைக்கேல் ஜாக்சன் 1

மைக்கேல் ஜாக்சன் 2

மைக்கேல் ஜாக்சன் 3

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil