»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னையில் 7 தியேட்டர்களில் ரிலீசாகவுள்ள "பாபா" படத்தின் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் 2மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. தட்ஸ்தமிழ்.காம் ஏற்கனவே கூறியிருந்தது போல பாபா ஆடியோ கேசட்வாங்கியவர்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

"பாபா" ஆடியோ கேசட்டுகள் வாங்கியவர்களுக்கு மட்டும் தான் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

கேசட் கட்டாயம்:

பாபா ஆடியோ கேசட்டை வாங்கியவர்களுக்கு ஏற்கனவே கூப்பன் தரப்பட்டிருந்தது. இந்தக் கூப்பனைகாட்டியவர்களுக்கு மட்டுமே டிக்கெட் விற்கப்படுகிறது. ஆடியோ கேசட் வாங்காதவர்களை தனி வரிசையில்நிற்கவைத்து கையில் கேசட்டைத் திணித்து அதற்கு காசு பறித்துக் கொண்ட பின்னரே படத்துக்கான டிக்கெட்வழங்கப்பட்டது.

"பாபா" டிக்கெட் ரிசர்வேஷன் நேற்று தொடங்கியது. இதையடுத்து ரசிகர்கள் "பாபா" வெளியிடப்படும்தியேட்டர்களில் முதல் நாள் ஷோவுக்கு டிக்கெட் ரிசர்வ் செய்ய குவிந்தனர்.

ஆல்பட், உதயம், மினி உதயம், அபிராமி, ஸ்ரீபிருந்தா, பிரார்த்தனா மற்றும் கோயம்பேடு ரோகினி ஆகிய 7தியேட்டர்களிலும் நேற்று ரஜினி ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

சனிக்கிழமை நள்ளிரவிலிருந்தே பல தியேட்டர்களில் ரசிகர்கள் தூங்காமல், சாப்பிடாமல் காத்துக் கிடந்து மறுநாள்காலை டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்றனர்.

டிக்கெட் விலை 200 ரூபாய்:

நீண்ட வசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கிச் சென்றனர் ரசிகர்கள். முதல் நாள் காட்சிக்குரிய டிக்கெட்டின்விலைகளும் தாறுமாறாக இருந்தன. ஒரு டிக்கெட்டின் ரூ.70 முதல் ரூ.200 வரை விற்கப்பட்டது. (ஆடியோ கேசட்விலை தனி!)

இருப்பினும் விலையைக் கண்டு கொள்ளாமல் தங்களது தலைவரை முதல் காட்சியிலேயே தரிசித்து விட வேண்டும்என்பதற்காக ரஜினி ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை வாரியிறைத்துக் கொடுத்து டிக்கெட்டுகளைவாங்கிச் சென்றனர்.

ரசிகர்களில் பெரும்பாலோர் சாதாரண வேலை பார்ப்பவர்களே. இந்தப் படத்தைப் பார்ப்பதற்காகவெளியூர்களிலிருந்தும் (அங்கு "பாபா" ரிலீஸ் செய்யப்படாத காரணத்தால்) நூற்றுக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட்வாங்க நேற்று சென்னை வந்திருந்தனர்.

பாண்டிச்சேரியில் முன்பதிவுக்குத் தடை:

இதற்கிடையே பாண்டிச்சேரியில் மட்டும் முன்பதிவு வசதி கிடையாது என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

அங்குள்ள தியேட்டர்களில் எந்தப் படத்திற்கும் முன்பதிவு வசதி கிடையாது. அங்கு முன்பதிவு முறையே ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இதனால் "பாபா"வுக்கும் அங்கு முன்பதிவு கிடையாது. அந்தந்த காட்சிகளுக்கு அப்போது மட்டும் தான் சென்றுடிக்கெட் வாங்கிக் கொள்ள வேண்டும்.

ரஜினியின் குரு வருகை:

இதற்கிடையே "பாபா"வை ஐதீக முறைப்படி 14ம் தேதியே ரிலீஸ் செய்வதற்காக அமெரிக்காவிலிருந்து ரஜினியின்குருவான சச்சிதானந்த சுவாமிகள் சென்னை வந்துள்ளார்.

சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் மட்டும் 14ம் தேதியே "பாபா" திரையிடப்படவுள்ளது. ரஜினி, அவருடையகுடும்பத்தினர், அவருடைய நண்பர்கள், ஒரு சில வி.ஐ.பிக்கள் மற்றும் சச்சிதானந்த சுவாமிகள் இந்த ஐதீக ரிலீஸ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.

அதன்படி முறைப்படி "பாபா" மறுநாள் தான் (ஆகஸ்ட் 15ம் தேதி) மற்ற தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.

படத்தில் திடீர் மாற்றம்:

பாபாவில் சில கடைசி நேர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம். படம் குழப்பமே இல்லாமல் வர வேண்டும் என்பதால் இந்த மாற்றமாம்.

வாலி எழுதிய ராஜ்யமா இல்லை இமயமா என்ற பாட்டில் வரும் சில வரிகளுக்கு திராவிடர் கழகம் ஆட்சேபனை தெரிவித்து வழக்குப் போட்டது.உடனடியாக அந்த வரிகளை மாற்ற ரஜினி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

இந்த வழக்கு செய்திகளால் அப்செட் ஆகிப் போன ரஜினி படத்திலும் சில மாற்றங்களை செய்ய உத்தரவிட்டுள்ளாராம். அவரது உத்தரவின்படி சின்னச்சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம். மாற்றப்பட்டவற்றில் பெரும்பாலானவை கிராபிக்ஸ் காட்சிகளாம்.

சர்ச்சைக்குரிய பாடலிலும் புதிய வரிகளை கொடுத்து மாற்றி விட்டாராம் வாலி. அதையும் பதிவு செய்து முடித்து விட்டார்களாம்.

இனி 15-ம் தேதிக்காக காத்திருக்க வேண்டியதுதான் பாக்கி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil