»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பாபா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வாயில் சிகரெட்டுடன் வரும் காட்சிகளை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு பாபா சின்னத்துடன் கூடிய பிள்ளையார் சிலைகள்தயாரிக்கப்பட்டு வருவதற்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

பிரச்சனை 1:

சென்னையைச் சேர்ந்த பாலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பாபாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.தனது மனுவில், பாபா படத்தில் நடிகர் ரஜினி காந்த் சிகரெட் பிடிப்பது போலவும், வாயிலிருந்து சிகரெட் புகைவெளிவருவதைப் போலவும் நடித்துள்ளார்.

இதை பார்க்கும் சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமல்லாது பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் ரஜினி புகைபிடிப்பது போன்ற காட்சிகள் அடங்கிய கட் அவுட்கள், பேனர்கள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதுசட்டவிரோதமானது.

இந்தக் காட்சிகளை ரத்து செய்ய வேண்டும். அதுபோல படத்திற்குக் கொடுக்கப்பட்ட தணிக்கை சான்றிதழையும்ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

பிரச்சனை 2:

பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி பல்வேறு வகையான பிள்ளையார் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குவந்துள்ளன.

அதில் ஒன்று பாபா பிள்ளையார். ரஜினி காந்த்தின் பாபா படத்தில் வரும் இரட்டை விரல் முத்திரையைபிள்ளையார் காட்டுவது போன்று இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த பாபா பிள்ளையார் சிலைகளுக்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

சென்னையில் பெரும் அளவில் பிள்ளையார் சிலைகள் தயாரிக்கும் பகுதியான கொசப்பேட்டையில் பாபா ஸ்டைல்பிள்ளையார்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த பாபா பிள்ளையார்களுக்கு இந்து முன்னணி உள்ளிட்ட பல அமைப்புகளும் எதிர்ப்புதெவித்துள்ளனாரம். இது கடவுளைக் கொச்சைப்படுத்துவது போல உள்ளதால் இது போன்ற சிலைகளைத்தயாரிக்க வேண்டாம் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் சிலை தயாரிப்பாளர்கள் குழம்பிப் போயுள்ளனர். பாபாவை வைத்து காசு பார்த்து விடலாம் என்றுநினைத்த அவர்களுக்கு புதிய பிரச்சினை வந்துள்ளதால் கவலையில் உள்ளனர்.

இருப்பினும் ரசிகர்கள் இந்த வகை சிலைகளை அதிக அளவில் வாங்குவார்கள் என்று நம்பிக் கொண்டுள்ளனர்அவர்கள்.

Please Wait while comments are loading...