»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பாபா படம் வெற்றி பெற்றால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த விழாவில் பாபா தெலுங்கு ஆடியோ கேசட்டை ரஜினி வெளியிட அவரது நண்பரும் தெலுங்குநடிகருமான சிரஞ்சீவி பெற்றுக் கொண்டார். இந்தப் படம் ஆந்திராவில் 120 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளது. இதன்மூலம்ரஜினிக்கு ரூ. 16 கோடி கிடைத்துள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் படம் கூட இவ்வளவு விலைக்கு விற்கப்பட்டதில்லை.

இந்த விழாவிலஸ் ரஜினி பேசியதாவது:

நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட பல முறை முயன்றும் முடியவில்லை. என்னால் நடிக்காமல் இருக்க முடியவில்லை. 12வருடங்களுக்கு முன்பே நடிப்பு போதும் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால், தொடர்ந்து படங்கள் வந்தன. விட முடியவில்லை.

முத்து படத்தில் நடித்தபோது இது தான் கடைசி படம் என்று நினைத்தேன். அதை ஆண்டவனிடமும் வேண்டினேன். ஆனால்,தொடர்ந்து நடிக்க வேண்டிய அவசியம் வந்ததால் அருணாசலத்தில் நடித்தேன். அந்தப் படம் சரியாக ஓடவில்லை.

இதனால் ஒரு வெற்றிப் படம் தந்துவிட்டு ஒதுங்கிவிட நினைத்தேன். அப்போது தான் படையப்பா உருவானது. அது பெரும்வெற்றி பெற்றது. ஆனாலும் நான் தொடர்ந்து நடிக்கவில்லை. எனக்கும் சினிமாவுக்கும் உள்ள இடைவெளியை முடிந்தவரைஅதிகரித்தேன். கிட்டத்தட்ட மூன்றரை வருடஙகளாக ஒதுங்கி இருந்தேன்.

கடந்த வருடம் அமெரிக்காவில் விர்ஜீனியாவில் உள்ள சச்சிதானந்த சுவாமிகள் ஆசிரமத்துக்குச் சென்றேன். அப்போதுஅங்கிருந்த சுவாமிகள் ஒருவர் சினிமாவை விட்டு விலகுவதைவிட அதன் மூலம் ஏதாவது நல்ல கருத்தை சொல்ல முயலலாமேஎன்று எனக்கு அறிவுரை சொன்னார்.

சரி படம் பண்றதுன்னு முடிவு செஞ்சேன். அப்புறம் இமயமலைக்குச் சென்றேபோது அங்கு மாகாவ்தார் பாபாஜி சுவாமிகளைப்பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக அவர் அங்கு வாழ்ந்து வருகிறார்.

சாகா வரம் தரும் யோகத்தை அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் சொல்லித் தந்தார். அதை அர்ஜூனன் பதஞ்சலிக்குச் சொன்னார்.பதஞ்சலி இன்னொருவருக்குச் சொல்லித் தந்தார். அவர் இந்த பாபாஜிக்கு சொல்லித் தந்திருக்கிறார். அதன் மூலம் 2000ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பாபாஜி தன் வாழ்க்கையில் இயேசு நாதர் முதல் சங்கராச்சாரியார் வரை அனைவருடனும்

பழகியிருக்கிறார்.கபீர்தாசருக்குக் கூட இவர் குருவாக இருந்திருக்கிறார். அவரைச் சந்தித்தபோது சினிமா மூலம் நல்ல விஷயங்களை சொல்லுங்கள்

என்றார்.இது கோடிக்கணக்கான பணம் புரளும் தொழிலாச்சே. இதில் எப்படி நல்ல விஷயங்களை சொல்வது என்று கேட்டேன்.கமர்சியலாவே சொல்லுங்கள் என்றார். அப்போது தான் பாபா படத்தின் கதையை உருவாக்கினேன்.

இந்து மதத்தின் மிக உயரிய தத்துவங்களை வியாபாரரீதியில் தர முயன்றுள்ளேன்.

நான் பல வெற்றிப் படங்களைத் தந்திருந்தாலும் என் கடைசி படம் பெரும் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.அதற்காக இறைவனை வேண்டுகிறேன். இந்தப் படம் வெல்லுமா இல்லையா என்று தெரியாது.

ஆனால், வெற்றி பெற்றால் சினிமாவில் இருந்து விலகிவிடுவேன். அதற்காக படத்தை பார்க்காமல் இருந்துவிடாதீர்கள் என்றார்ரஜினி.

பாபாவோடு படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியல் பக்கம் ரஜினி ஒதுங்க வாய்ப்புள்ளது.

"பாபா" தியேட்டருக்கு குண்டு மிரட்டல்:

இதற்கிடையே தமிழர்களின் பணத்தை சுரண்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ள "பாபா" படத்தைத் திரையிட்டால்தியேட்டருக்கு குண்டு வைத்துத் தகர்ப்போம் என்று மயிலாடுதுறையில் உள்ள தியேட்டருக்கு மிரட்டல் கடிதம்வந்துள்ளது.

"பாபா" படம் வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது. மயிலாடுதுறையில் உள்ள தியேட்டரிலும் இந்தப்படம் ரிலீசாகிறது.

இந்த நிலையில் அந்தத் தியேட்டருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தை தமிழர் விடுதலை இயக்கம் என்றஅமைப்பு அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில்,

ரஜினி தமிழ் மக்களை ஏமாற்றியே பணம் சம்பாதித்து வருகிறார். தமிழர்களை சுரண்டிய ரஜினியின் "பாபா" படம்தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப் பெரும் சவால்.

எனவே உங்கள் தியேட்டரில் "பாபா" திரையிடப்பட்டால், தியேட்டரை குண்டு வைத்துத் தகர்ப்போம் என்றுஅக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து விசாரணை நடத்தினர். அந்தத்தியேட்டருக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil