Don't Miss!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Automobiles
டாடாவின் இந்த கார் மாடல்களில் பெட்ரோல் தேர்வை வாங்க முடியாது.. டீசலில் மட்டுமே கிடைக்கும்! இது ஏன் தெரியுமா?
- News
நாய்க்கு கூட சொத்தில் பங்குண்டு.. ஆனால் ட்ரம்ப்புக்கு இல்லை..முதல் மனைவி இவானா எழுதிய உயில் ரகசியம்
- Lifestyle
Today Rasi Palan 26 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது...
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பாபா ரீ ரிலீஸ்..மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்..கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை :சூப்பர் ஸ்டாரின் பாபா நேற்று ரீ ரிலீஸாகி உள்ள நிலையில், அதில் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72வது பிறந்த நாள் நாளை முன்னிட்டு பாபா படம் நேற்று ரீ ரிலீஸானது.
சென்னையில் மழை, புயுல், குளிர்வாட்டி எடுத்த போதும் ரஜினியின் ரசிகர்கள் பாபா படத்தை திரையரங்குக்கு கூட்டம் கூட்டமாக சென்று பார்த்ததை பார்க்க முடிந்தது.
20
வருஷத்திற்கு
பிறகும்
அதே
எனர்ஜி..பாபா
ரீ
ரிலீஸ்..கொண்டாடும்
ரசிகர்கள்!

பாபா
2002ம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் திரைக்கதை அமைத்து தயாரித்த திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில், ரஜினிகாந்த், மணிஷா கொய்ராலா, நாசர், கவுண்டமணி, எம்.என்.நம்பியார், ரம்யா கிருஷ்ணன், சுஜாதா, சீமா ஆகியோர் நடித்திருந்தார்கள். இசைபுயல் ஏஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

ரசிகர்கள் எதிர்பார்த்த படம்
பாபா திரைப்படம் திரையரங்கில் வெளியான காலகட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் மக்களுக்கு இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அந்த அளவுக்கு சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது. பாபா படத்தில் ரஜினி புகைப்பிடிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறி, பாமகவினர் பாபா படம் திரையிடப்பட்ட திரையரங்குகனை சூறையாடினர், படப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு ஓடினர். இது 20 வருடத்திற்கு முன்பு பரபரப்பான செய்தியாக பேசப்பட்டது.

பெருத்த நஷ்டம்
அதே போல, பாபா திரைப்படம் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியதால், விநியோகஸ்தர்களுக்கு ரஜினி நஷ்டஈடு அளித்தார். படம் தோல்வி அடைந்ததற்கு இதற்கு முன் யாரும் நஷ்ட ஈடு அளித்ததில்லை, நஷ்டப்பட்டவர்களுக்கு பணத்தைத் திருப்பி அளித்து முன்மாதிரியாக ரஜினி நடந்து கொண்டார் என ரஜினி ரசிகர்கள் ரஜினியை புகழ்கின்றனர்.

புதுபொலிவுடன்
இப்படி பல சர்ச்சைகளை கொண்ட பாபா திரைப்படம், 20 ஆண்டுகள் கழித்து நேற்று, நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் புது பொலிவுடன் மீண்டும் திரையரங்கில் வெளியானது. சென்னையில் கடந்த சில தினங்களாக புயல், மழை, குளிர் வாட்டிவதைத்த நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக படத்தைப் பார்த்து கொண்டாடினர். ரீ ரிலீசாகும் படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்பா என கோலிவுட்டே நேற்று ஸ்தம்பித்தது.

கிளைமாக்ஸ் காட்சி மாற்றம்
இந்நிலையில், ரீ ரிலீஸாகி உள்ள பாபா படத்தின் கிளைமாக்ஸ் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பழைய பாபா படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில் மக்களிடம் செல்வதா அல்லது பாபாவிடம் செல்வதா என்று பாபாஜியை சந்தித்து ரஜினி ஆலோசனை கேட்பார். அப்போது பாபா கூறிய அறிவுரையை ஏற்று ரஜினிகாந்த் மக்களிடம் செல்வது போல் அதாவது அரசியலுக்கு வருவார் என்பது போல காட்சி இருக்கும்.

இதுவும் நல்லாத்தான் இருக்கு
ஆனால், தற்போது வெளியாகி உள்ள ரீ ரிலீஸ் பாபா படத்தில் அதை மொத்தமாக தூக்கிவிட்டு, நீ உன் தாயின் ஆசையை நிறைவேற்றவில்லை இதனால், நீ மீண்டும் உன்னுடைய தாய் வயிற்றில் மறுஜென்மத்தில் பிறந்து உன் தாயின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்று, அதன்பின் நானே உன்னை அழைத்து கொள்கிறேன் என்று ரஜினியிடம் பாபா காட்சி மாற்றப்பட்டுள்ளது. அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினி தீர்க்கமாக முடிவு எடுத்துள்ளதால், இந்த காட்சியை இப்படி மாற்றி உள்ளார்கள். இதனை ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.