»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஸ்பைடர் மேன் படத்தில் வரும் முத்திரையை, முறையான அனுமதியின்றிபாபா படத்தில் பயன்படுத்திக் கொண்டிருப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குத் தொடருவது குறித்து அமெரிக்காவின்கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

3 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் பாபா என்ற படத்தை எடுத்தும் நடித்தும் வருகிறார். இதுதொடர்பாகவெளியான பத்திரிக்கை விளம்பரங்களில் ஆள்காட்டி விரல் மற்றும் கடைசி விரலை நீட்டியும், நடு விரல்களை மடக்கியும்வித்தியாசமான போஸ் கொடுத்திருந்தார் ரஜினி.

ரசிகர்களிடையே இந்த போஸ் காட்டுத் தீ போல பரவிவிட்டது. ரஜினி ரசிகர்கள் பெரும்பாலும் விரல்களை இப்படி வைத்துக்கொண்டு தான் நடமாடி வருகின்றனர்.

இந் நிலையில் ரஜினி கொடுத்த இந்த போஸ் ஸ்பைடர் மேன் படத்திலிருந்து "சுடப்பட்டது" என்று தெரிய வந்துள்ளது. ஸ்பைடர்மேன் படத்தில் ஸ்பைடர் மேனாக வரும் நடிகர், பலவித ஸ்டைல்களை செய்வார். அதில் ஒன்றுதான் பாபா படக்குழுவினர் சுட்டபோஸ் என்கிறார்கள் கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்தினர். இந்த போஸை அந்த நிறுவனம் காப்பி ரைட் செய்திருப்பதாகவும்கூறப்படுகிறது.

இந்த சுட்ட போஸ் குறித்து கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சென்னை பிரிவு அலுவலக பிராந்திய மேலாளர், பேப்பர்கட்டிங்குகளுடன் விரிவான அறிக்கை ஒன்றை மும்பையில் உள்ள தங்கள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுதொடர்பாக இனி மும்பை அலுவலகம்தான் நடவடிக்கை எடுக்கும் என்று சென்னை அலுவலகத்தினர் கூறினர். இருப்பினும்காப்பிரைட் மீறல் தொடர்பாக ரஜினி மீது வழக்குத் தொடரப்படுமா என்று நிச்சயமாகத் தெரியவில்லை.

ஆனால், கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம் என்று தெரிகிறது.

பாபா ஸ்டைல் போஸ் வெளியான சில நாட்களிலேயே பத்திரிகைகளில் ரஜினி தரப்பிலிருந்து ஒரு வக்கீல் அறிவிப்புவெளியானது என்பது நினைவுகூறத்தக்கது. அதில், பாபா படத்தின் ஸ்டில்களை, ஸ்டைல் போஸ்களை அனுமதியின்றி யாரும்வெளியிடக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அந்த போஸ்களை பெப்சி குளிர்பான நிறுவனம் மூலம் வெளியிட்டு, விற்று காசு பார்க்க ரஜினி தரப்பில் முடிவு செய்திருப்பதாகக்கூறப்பட்டது.

இந் நிலையில் அந்த போஸ்களே சுடப்பட்டவை தான் என்கிறது கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம். சுட்ட போசுக்கே சட்டஎச்சரிக்கையா என்று கேட்கிறார்கள் இந்த நிறுவனத்தினர்.

ஆனால், இது ம்ருகி என்று கூறப்படும் மானைக் குறிப்பிடும் முத்திரை என்று பத்திரிக்கைகளில் எழுதப்பட்டு வருகிறது. இதுவரைஅந்த போஸ் எதைக் குறிக்கிறது என ரஜினி தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வரவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

ரஜினி என்ற இமேஜின் உதவி தங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் உதவலாம் என்பதால் அமெரிக்க நிறுவனம் இதைபெரிதுபடுத்தாது என்றே கருதப்படுகிறது. பெப்சி போன்ற நிறுவனங்கள் இதில் தலையிட்டு அமைதிப்படுத்திவிடும் என்றுகூறப்படுகிறது.

Please Wait while comments are loading...