»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

அதிக கவர்ச்சி காட்டாமல் ஆடியதால் நடிகை பபிதா மீது பீர் பாட்டில்களை வீசித் தாக்குதல் நடந்தது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி விழாவைஒட்டி பொருட்காட் நடந்து வருகிறது. இதில் பபிதா கலந்து கொண்டு நடனமாடினார். பின்னர்அவருக்கு உள்ளூர் மக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது.

பாராட்டு விழாவில் பலரும் பேசினர். இறுதியில் மேடையில் பேசுவதற்காக மைக் முன் வந்து நின்றார்பபிதா. அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களின் விசில் சப்தம் காதைப்பிளந்தது. பின்னர் பபிதா பேசத் தொடங்கினார்.

அப்போது திடீரென்று பீர் பாட்டில்கள் பபிதாவை நோக்கிப் பறந்து வந்தன. பாட்டில்கள் மைக் மீதுமோதி உடைந்து அதன் சிதறல்கள் பபிதா முகத்தில் பாய்ந்தன. இதனால் பபிதா அதிர்ச்சி அடைந்தார்.அவரை அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் விரைந்து வந்து பத்திரமாக அங்கிருந்துஅப்புறப்படுத்தினர்.

பபிதா மீது பாட்டில்களை வீசிய கும்பல் தப்பியோடிவிட்டது.

தங்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் பபிதா அதிகமான கவர்ச்சி காட்டாததால் கோபமடைந்தரசிகர்கள் கான் பீர் பாட்டிலை அவர் மீது எறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பபிதாவின் "பேச்சைக் கேட்க" ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் பெரும்ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil