விரைவில் 2வது கல்யாணம்.. ரகசிய திருமணம் பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்லை.. பப்லு ஓப்பன் டாக்!
சென்னை: நடிகர் பப்லு மலேசியாவை சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று ஏகப்பட்ட செய்திகள் பரவி வந்த நிலையில், அவரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு இன்னும் தான் 2வது திருமணம் பண்ணவில்லை எனக் கூறியுள்ளார்.
சினிமா, சின்னத்திரை என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் பப்லு, அன்பே வா சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் இரண்டாவது திருமணம் செய்து விட்டதாக பரவிய தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார். ஆனால், கூடிய விரைவிலேயே 2வது திருமணம் செய்யப் போகிறேன் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளார்.

கோலிவுட்டில் பரபரப்பு
புதிய மன்னர்கள், அவள் வருவாளா உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் பப்லு ப்ரித்விராஜ் தற்போது அன்பே வா உள்ளிட்ட சின்னத்திரை சீரியல்களிலும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். 56 வயது நடிகர் 23 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து விட்டாரா? என்கிற கேள்வியுடன் கோலிவுட்டே பெரும் பரபரப்பு அடைந்துள்ளது. இந்நிலையில் அவர் அளித்துள்ள விளக்கம் இதோ உங்களுக்காக..

2வது திருமணம் பண்ணல
நடிகர் பப்லு மலேசியாவை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக அவரை அணுகி கேட்டதும், இப்போதைக்கு என்ன கிளாரிஃபிகேஷன் கொடுப்பது என்று தெரியவில்லை. நாளை இதுதொடர்பாக விரிவாக கூறுகிறேன் என்று சொல்லி இருந்தார். இந்நிலையில், இன்று மீண்டும் அவரை அணுகி விசாரித்த போது, தான் இன்னும் 2வது திருமணம் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

பிரைவசி அவசியம்
சினிமா நடிகர்கள் பொது சொத்து என்றாலும், அவர்களுக்கான சொந்த வாழ்க்கையில் சில பிரைவசி அவசியமாக தேவைப்படுகிறது. வெளிப்படையாக சில விஷயங்களை பிரபலங்கள் சொன்னாலும், அதை வைத்து ஆயிரம் கேள்விகள் உருவாகிறது. நெட்டிசன்கள் என்கிற போர்வையில் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் என் சொந்த வாழ்க்கையை ட்ரோல் செய்கின்றனர். அதனால் தான் இப்போதைக்கு உரிய விளக்கம் கொடுக்கக் கூட யோசிக்கிறேன் என்று ஆரம்பத்தில் பிடி கொடுக்காமல் விரக்தியில் பேசினார்.

ரகசிய திருமணம் செய்யும் அவசியமில்லை
நான் மற்றவர்களை போல ரகசியமாக திருமணம் செய்யும் ஆள் கிடையாது. அடுத்த திருமணத்துக்கு ரெடியாகி விட்டேன் என்றால், அனைவருக்கும் அறிவித்த பின்னர் தான் திருமணம் செய்வேன். ஆனால், தேவையில்லாத கதைகள் என்னுடைய பர்சனல் விஷயம் பற்றி பரவி இருப்பது என்னை ரொம்பவே பாதிக்க வைத்துள்ளது என்றார்.

விரைவில் திருமணம்
ஆனால், அந்த பெண்ணை திருமணமே நீங்க செய்யப் போவதில்லையா? என்கிற கேள்விக்கு அந்த பெண்ணை காதலித்து வருகிறேன் என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார். கூடிய விரைவிலேயே அனைவரும் அறியும் வண்ணம் தனது 2வது திருமணம் நடைபெறும் என்றும் நடிகர்களை கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்க, அவர்கள் பர்சனல் வாழ்க்கையை பற்றி தப்பாக பேச வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார் நடிகர் பப்லு.


Click it and Unblock the Notifications











