»   »  குடிக்கு அடிமையான விருச்சிக காந்த்துக்கு மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை!

குடிக்கு அடிமையான விருச்சிக காந்த்துக்கு மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மீட்கப்பட்ட விருச்சிககாந்த் என்கிற நடிகர் பாபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பரத், சந்தியா நடித்த காதல் படத்தில் விருச்சிககாந்தாக நடித்தவர் பல்லு பாபு. தாய், தந்தை இறந்த பிறகு மனநலம் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள கோவில் ஒன்றில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.

அவரை நடிகர் தீனாவும், இயக்குனர் மோகனும் மீட்டனர்.

பாபு

பாபு

நடிகர் தீனா பாபுவை அழைத்துச் சென்று வீட்டில் தங்க வைத்தார். பின்னர் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து, உடை, செல்போன் எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

குடிப்பழக்கம்

குடிப்பழக்கம்

இரவு 8 மணியானால் பாபு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அவர் எங்கே செல்கிறார் என்று பார்த்தால் ஒயின் ஷாப்புக்கு சென்று அங்கு வருபவர்களிடம் காசு கேட்டு மது அருந்தியுள்ளார்.

ஒயின்

ஒயின்

பாபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதை தீனா புரிந்து கொண்டார். குடித்த பிறகு பாபு சுவரை பார்த்து அவராக பேசுகிறாராம். அவர் ஆளே மாறி நடந்து கொள்கிறாராம்.

மறுவாழ்வு

தீனாவும், மோகனும் சேர்ந்து பாபுவை நாப்பாளையத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். பாபுவை ஒரு மாதத்தில் குணப்படுத்திவிடலாம் என்று அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த வீடியோவை இயக்குனர் மோகன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர்

இயக்குனர்

பாபுவின் நிலைமை பற்றி அறிந்து 25 இயக்குனர்கள் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர். மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்த பிறகு பாபு நிச்சயம் சினிமாவில் நல்ல நிலைக்கு வருவார் என்று நம்பப்படுகிறது.

English summary
Actor Babu who was found begging has got addicted to alcohol. He is admitted in a rehabilitation centre in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil