»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

இயக்குநர் பாரதிராஜாவின் "என் உயிர்த் தோழன்" படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, கடந்த 11 வருடமாகஉயிருக்குப் போராடி வரும் நடிகர் பாபுவுக்கு சக நடிகரான "இளைய தளபதி" விஜய் ரூ.2 லட்சம் கொடுத்துஉதவியுள்ளார்.

முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாபு, அடிமட்ட அரசியல் தொண்டனாக வந்து அனைவரையும் தனதுநடிப்பால் கவர்ந்தார். அந்த நடிப்பால் அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. கிட்டத்தட்ட 14 படங்களில்நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார் பாபு.

ஆனால் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்த பாபுவுக்கு "மனசார வாழ்த்துங்களேன்" படத்தில்நடித்தபோதுதான் சோதனை ஏற்பட்டது. ஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து குதித்தபோது அவருக்குமுதுகில் அடிபட்டது.

தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தபோதிலும், பாபுவால் அதன் பிறகு எழுந்து நடமாட முடியவில்லை. படுத்தபடுக்கையான அவர், கடந்த 11 வருடமாக படுக்கையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்தில் அவரதுஉடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவரது நிலை குறித்து செய்திகள் வெளியாகின.

இதைக் கேள்விப்பட்ட நடிகர் விஜய் பாபு வீட்டுக்கு சென்று ரூ.2 லட்சத்திற்கான செக்கைக் கொடுத்து விரைவில்குணமடைய வேண்டும் என்று பாபுவுக்கு ஆறுதல் தெரிவித்தார். பாபுவைச் சந்தித்து விட்டு வெளியே வந்த விஜய்நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

பாபு ஒரு நடிகர், நானும் ஒரு நடிகன். அவரது நிலையைப் பற்றி அறிந்ததும் நிறைய பீல் செய்தேன். உடனடியாகஅவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

இது ஒரு சின்ன உதவிதான். ஆனால் அதில் எனது உணர்வு நிறையவே அடங்கியுள்ளது. இன்னும் பத்து பேர்இதுபோல உதவியைச் செய்தால் பாபுவால் எழுந்து நடமாடமுடியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.என்னால் முடிந்ததை கொடுத்து அதற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளேன்.

நான்கைந்து படங்களை நடித்து முடித்து, கையில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை வைத்திருந்த ஒரு நடிகர் இப்படிகடந்த 11 வருடங்களாக முடங்கிக் கிடப்பது மனதை என்னவோ செய்கிறது.

ஒரு மனிதனுக்கு என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே, வாழும்காலத்திலேயே மற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து விட்டுப் போய் விட வேண்டும் என்றுதான்இப்போது எனக்குத் தோன்றுகிறது என்றார் விஜய்.

விஜய்யுடன் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் உடன் வந்திருந்தார்.

Read more about: babu, bharathiraja, cinema, hero, life, vijay

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil