»   »  ச்ச்சீ, ஒரே ஆபாசம்: 'இந்த' படத்திற்கு 48 இடங்களில் கத்தரி போட்ட சென்சார் போர்டு

ச்ச்சீ, ஒரே ஆபாசம்: 'இந்த' படத்திற்கு 48 இடங்களில் கத்தரி போட்ட சென்சார் போர்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாபுமோஷாய் பந்தூக்பாஸ் இந்தி படத்தில் 48 இடங்களில் கத்தரி போட உத்தரவிட்டுள்ளது சென்சார் போர்டு.

நவாஸுத்தீன் சித்திக்கி நடித்துள்ள இந்தி படம் பாபுமோஷாய் பந்தூக்பாஸ். குஷன் நந்தி இயக்கியுள்ள இந்த படத்தை கிரண் ஷ்ராப் தயாரித்துள்ளார்.

படம் வரும் 25ம் தேதி ரிலீஸாக உள்ளது.

சென்சார்

சென்சார்

படத்தை பார்த்த சென்சார் போர்டு ஏ சான்றிதழ் தான் தருவோம் என்று கூறியது. மேலும் படத்தில் 48 இடங்களில் காட்சிகளை கத்தரி போடவும் சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது.

ஆபாசம்

ஆபாசம்

படத்தில் ஒரே ஆபாசம், கண் கொண்டு பார்க்க முடியவில்லை என்று சென்சார் போர்டு தெரிவித்துள்ளது. 48 காட்சிகளை நீக்கச் சொன்னதை கேட்டு படக்குழுவினர் கொந்தளித்துள்ளனர்.

கிரண்

கிரண்

சென்சார் போர்டு உறுப்பினர்கள் பற்றி தயாரிப்பாளர் கிரண் கூறியதாவது, முதலில் படத்தை பார்க்க அவர்கள் வெகுநேரம் எடுத்தனர். படத்தை பார்த்த பிறகு ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி ஒரு படத்தை எடுத்துள்ளீர்களே என்று என்னை அசிங்கப்படுத்தினர் என்றார்.

எப்படியும் படத்திற்கு ஏ சான்றிதழ் தான் அளிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது 48 காட்சிகளை ஏன் நீக்க வேண்டும். குழந்தைகளும் பார்ப்பார்கள் என்பதால் 48 இடங்களில் கத்தரி போடச் சொன்னோம் என்று அவர்கள் அளித்த விளக்கத்தை ஏற்க முடியாது என்றார் கிரண்.

English summary
The Central Board of Film Certification (CBFC) has ordered the team of Babumoshai Bandookbaaz to cut 48 scenes in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil