For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அஜித் அங்கிள் விஜய் அங்கிள் கூட நடிச்சது ப்ரௌடா இருக்கு - பேபி மோனிகா

  |

  சென்னை: கனா படத்தில் நடித்தது ஒரு புது விதமான அனுபவம். பிரேக் டைம்ல இயக்குனர் அருண் ராஜா காமராஜுடன் கிரிக்கெட் விளையாடுவாராம் மோனிகா. இவருக்கு பவுலிங் தான் மிகவும் பிடிக்குமாம். ஸ்போர்ட்ஸ் விளையாட விருப்பம் இருந்தாலும், டென்னிஸ் பிளேயர் ஆக வேண்டும் என்பதே இவரின் கனவு.

  இந்த காலத்தில பச்சை புள்ளைங்க எல்லாம் சும்மா எல்லாத்தையும் அசால்ட்டா செஞ்சு முடிச்சிடுறாங்க. டான்ஸ், பாட்டு, ஃபைட், நடிப்பு, இசை, ஓவியம், நீச்சல் இப்படி இன்னும் அடுக்கிகிட்டே போகலாம். கொஞ்சம் கூட கேமெராவிற்கோ அல்லது மேடைக்கோ பதற்றமே படாமல் நம்மள அசத்துறாங்க. பொறக்கும் போதே கலைஞனாக பொறக்குறாங்க பா இந்த பசங்க. இப்படி தான் நாம் இன்றைக்கு இருக்கும் குழந்தைகளை பாராட்டுறோம். அதுக்கு ஒரு எடுத்துக்காட்டு தான் பேபி மோனிகா சிவா.

  Baby Monika like to become a Tennis Player

  இந்த குட்டி பொண்ணுக்கு 10 வயது தான் இருக்கும். ஆனா அதுக்குள்ள 12 படத்திற்கும் மேல நடிச்சுட்டா. அஜித், விஜய், ஜெய், சமுத்திரக்கனி, தமன்னா, சத்தியராஜ், விஷ்ணு விஷால், கார்த்தி இப்படி பல நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் பேபி மோனிகா.

  தல அஜித் நடித்த வேதாளம் திரைப்படத்தில் ஒரு சீனில் மட்டுமே மோனிகா நடித்திருந்தாலும், அது தான் அவரது திரை வாழ்விற்கு அடித்தளம் போட்ட படம். விளம்பரங்களில் நடித்ததன் மூலம் இந்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது இந்த கியூட் குட்டிக்கு. அதை தொடர்ந்து இளைய தளபதி விஜய்யுடன் பைரவா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

  இந்த படம் மூலம் மோனிகா மிகவும் பிரபலமானார். அவருக்கு அஜித், விஜய் இரண்டு போரையும் ரொம்ப பிடிக்குமாம். சாக்லேட் எல்லாம் வாங்கி கொடுப்பார்களாம். முதலில் கொஞ்சம் பதட்டப்பட்டாலும் ஷூட்டிங் ஆரம்பித்தவுடன் பயம் எல்லாம் போயிருச்சாம் மோனிகாவிற்கு.

  Baby Monika like to become a Tennis Player

  சமுத்திரக்கனியின் ஆண் தேவதை திரைப்படத்தில் அவருடைய மகளாக நடித்தார். அவர் நடிப்பு பற்றி நிறைய டிப்ஸ் சொல்லிக் கொடுத்தாராம். பிறகு நடிகர் ஜெய் நடித்த பலூன் திரைப்படத்தில் கலக்கியுள்ளார் மோனிகா. பலூன் படத்தில் நடித்த அனுபவம் மோனிகாவிற்கு மிகவும் பிடித்ததாம். அந்த ஷூட்டிங் மிகவும் த்ரில்லிங்கா இருந்ததுன்னு சொல்றாங்க மோனிகா.

  கனா படத்தில் நடித்தது ஒரு புது விதமான அனுபவம். பிரேக் டைம்ல இயக்குனர் அருண் ராஜா காமராஜுடன் கிரிக்கெட் விளையாடுவாராம் மோனிகா. இவருக்கு பவுலிங் தான் மிகவும் பிடிக்குமாம். ஸ்போர்ட்ஸ் விளையாட விருப்பம் இருந்தாலும், டென்னிஸ் பிளேயர் ஆக வேண்டும் என்பதே இவரின் கனவு. ஒரு கனவு மட்டும் அல்ல டைரக்டர், ட்ராவலர், பிளேயர், சயின்டிஸ்ட் ஏன் பல கனவுகளை வைத்துள்ளார் மோனிகா.

  கார்த்தி நடிக்கும் கைதி திரைப்படத்தில் நடித்துள்ளார் மோனிகா. மேலும் தற்போது வெளியாகியுள்ள நகைச்சுவை ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் திரைப்படத்தில் நடிகை தமன்னாவுடன் இணைந்து மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் மோனிகா.

  மோனிகா மிகவும் அழகாக பாடவும் செய்கிறாள். சிறு கதைகளை எழுதி தன் தங்கையுடன் நடித்து விளையாடுவார்களாம். ஒரு டைரக்டருக்கான முயற்சியை இப்போதில் இருந்தே ஆரம்பித்து விட்டார் இந்த குட்டி தேவதை. மோனிகாவிற்கு இந்த உலகம் முழுவதையும் சுற்றி வர வேண்டும் என ஆசையாம்.

  இவர் படிக்கும் பள்ளியும் மோனிகாவின் நடிப்பு பயணத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். தான் முடிக்க வேண்டிய கடமைகளை தவறாமல் செய்து முடித்துவிடுவாள். தனது பள்ளி படிப்பையும், திரை வாழ்க்கையையும் சரிசமமாக சிறப்பான முறையில் கையாண்டு வருகிறார் மோனிகா என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அவரது தாயார் அனிதா.

  விளையாட்டாக நடித்தாலும் அதில் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும், கடமைகளை சரிவர செய்வதிலும் பெரியவர்கள் கூட இந்த பிஞ்சு குழந்தையிடம் தோற்று போய்விடுவார்கள். இருப்பினும் அந்த குழந்தையின் ஆற்றலுக்கு உறுதுணையாய் இருக்கும் அவரது பெற்றோர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்.

  English summary
  For Baby Monika, playing 'Kaana' was a new experience. Monika has played cricket in break time with Director Arunraja Kamaraj. She's very much like Bowling. Despite her desire to play sports, her dream is to become a tennis player.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X