»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர் நெப்போலியனின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

வில்லிவாக்கம் சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், நெப்போலியனுக்கு வெற்றிப் பரிசாக ஆண்குழந்தை பிறந்துள்ளது அவருக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நெப்போலியனின் மனைவி ஜெயசுதா, பிரசவத்திற்காக ஞாயிற்றுக்கிழமை இரவுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திங்கள்கிழமை காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்ததை அறிந்த நெப்போலியன் மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்.நெப்போலியனுக்கு ஏற்கனவே தனுஷ் என்ற 3 வயது மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: actor, baby, chennai, napolean, ttamilnadu
Please Wait while comments are loading...