ராஜமெளலியா ? மணிரத்னமா?...யாருக்கு டஃப் கொடுக்க போகிறார் தனுஷ்?

சென்னை : தனுஷ் மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்ப போவதாக தகவல்கள் வெளியாகி வருவதால் ராஜமெளலி, மணிரத்னம் இவர்களில் யாருக்கு டஃப் கொடுப்பார் என கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக வரலாற்று நிகழ்வுகள், முந்தைய கால கட்ட கதைகளை பிரம்மாண்ட படமாக எடுத்து ஹிட் கொடுப்பதில் கை தேர்ந்தவர் ராஜமெளலி. மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் வரை அதை நிரூபித்தும் விட்டார். அதே போல் சமீபத்தில் பலரும் முயற்சி செய்து தோற்ற பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக, அதுவும் பிரம்மாண்ட படைப்பாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம்.

இரண்டாவது படம் காமெடி படமா

இரண்டாவது படம் காமெடி படமா

கடந்த சில நாட்களாக மீடியாக்களில் தனுஷ் மீண்டும் டைரக்டர் அவதாரம் எடுக்க போவதாக தகவல்கள் பரவி வருகிறது. பா.பாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு டைரக்டர் ஆன தனுஷ், அதற்கு பிறகு நடிப்பதில் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது தன்னுடைய இரண்டாவது படமாக காமெடி படம் ஒன்றை இயக்க போகிறார் என தகவல் அடிபட்டது.

தனுஷின் பிளான் இது தானா

தனுஷின் பிளான் இது தானா

ஆனால் அது உண்மையில்லையாம், ஏற்கனவே பாதியில் நிறுத்தப்பட்ட தனது கனவு படத்தின் டைரக்ஷனை தான் தனுஷ் தொடர போவதாக கூறப்படுகிறது. நாகர்ஜுனா, அதிதி ராவ், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து, தனுஷ் இயக்கி வந்த படம் சில நாட்கள் ஷுட்டிங் நடத்தப்பட்ட நிலையில் பல காரணங்களால் கைவிடப்பட்டது. இந்த படத்தை மீண்டும் தூசு தட்டி எடுக்க முடிவு செய்திருக்கிறாராம் தனுஷ்.

டைட்டில் கூட வச்சுட்டாங்களா

டைட்டில் கூட வச்சுட்டாங்களா

சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் நடப்பது போன்ற கதையாம். இந்த படத்திற்கு நான் ருத்ரன் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை DD 2 (Dhanush Director 2) தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

என்னப்பா இப்படி புகழ்றார்

என்னப்பா இப்படி புகழ்றார்

தேனாண்டாள் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் நடிக்கிறார்களாம். இந்த படத்திற்கு சீயன் ரோல்டன், ஓம் பிரகாஷ் இணைந்து இசையமைக்க போகிறார்களாம். இந்த படம் பற்றிய கடந்த ஆண்டு நாகர்ஜுனாவிடம் கேட்ட போது, இது வரலாற்று படம். இந்த ரோல் எனக்கு எக்ஸ்டிரா ஸ்பெஷல். இதற்கு முன் இப்படி ஒரு கேரக்டரில் நான் நடித்ததில்லை. 600 வருடங்களுக்கு முன் வாழ்ந்த கேரக்டரின் ரோலில் நடிக்க போகிறேன். மிகவும் ஆர்வமாக உள்ளது என்றார்.

ஆனா...தனுஷ் எப்படி ?

ஆனா...தனுஷ் எப்படி ?

ஆனால் தனுஷ் தற்போது தனது அண்ணன் இயக்கும் நானே வருவேன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதோடு வாத்தி, திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் டைரக்ஷன் வேலைகளை தனுஷ் எப்போது துவங்கி போகிறார் என்ற தெரியவில்லை. அது பற்றிய தனுஷ் விரைவில் முடிவெடுக்க போகிறாராம். இருந்தாலும் கதை பற்றிய தகவல்கள் அவர் நிச்சயம் ராஜமெளலி, மணிரத்னத்திற்கு டஃப் கொடுப்பார் என்றே பலரும் கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X