»   »  வளர்ந்த வேகத்திலேயே சரியும் சந்தோஷ் நாராயணன்?

வளர்ந்த வேகத்திலேயே சரியும் சந்தோஷ் நாராயணன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திறமையானவரை வேகமாக ஏற்றிவிட்டு அழகு பார்க்கும் சினிமா, அதே திறமையானவர் ஆடும்போது சறுக்கிவிடவும் தயாராக இருக்கும். அப்படி சறுக்கிக்கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

அட்டகத்தி மூலம் அறிமுகமான சந்தோஷ் நாராயணன் மிக வேகமாகவே வளர்ந்தார். பீட்சா, மெட்ராஸ், கபாலி என டாப் கியரில் போனார். ரஜினி, விஜய் என அடுத்தடுத்த பெரிய ஹீரோக்களின் படங்கள் கமிட் ஆனது. கோடிகளில் சம்பளம்.

ஆனால் சமீபகாலமாக சந்தோஷின் இசையில் புதிதாக ஒன்றுமே இல்லை. தீபாவளிக்கு ரிலீஸ் ஆன கொடி, காஷ்மோரா இரண்டு படங்களுக்குமே சந்தோஷ் தான் இசை. இரண்டிலும் சேர்த்தே ஒன்றிரண்டு பாடல்கள் தான் ஹிட் அடித்தன. சந்தோஷ் கேட்கும் சம்பளமும் பெரியது. சின்ன பட்ஜெட் படங்களுக்கு சந்தோஷை அணுக முடியாத அளவுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் சந்தோஷ் நாராயணன் அப்படி சம்பளம் வாங்கும் படங்களின் இசையை கூட சரியான நேரத்தில் கொடுப்பதில்லை.

முக்கியமாக சந்தோஷ் நாராயணன் மொபைல் பயன்படுத்துவதில்லை. எனவே அவரைப் பிடித்து பாடல்கள் கேட்டு வாங்குவதற்குள் இயக்குநர்களுக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது.

இதனாலேயே இப்போதெல்லாம் சந்தோஷ் நாராயணன் பேரைக் கேட்டாலே வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள் இயக்குநர்கள். அனிருத்திடம் இருந்து சந்தோஷ் நாராயணனுக்கு மாறிய தனுஷ் இப்போது ஷான் ரோல்டன் பக்கம் போய் விட்டார். ரஞ்சித்தும் அடுத்த படத்துக்கு சந்தோஷ் நாராயணனைப் புறக்கணிப்பார் என்கிறார்கள். அலெர்ட் பண்ணிட்டோம். அதுக்கு மேல உங்க விருப்பம் சந்தோஷ்!

English summary
Music director Santhosh Narayanan fall from his top position because of his attitude.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil