Don't Miss!
- News
பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படமா.. எதுவானாலும் இந்திய சட்டப்படி இருக்கனும் - அன்புமணி அட்வைஸ்
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. மார்ச் கடைசி வரையில் இந்த சலுகையை பெறலாம்..!
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இதுவும் நல்லாத்தான் இருக்கு… பேட்மிண்டன் குயின் பிவி சிந்துவின் க்யூட் டான்ஸ் வீடியோ !
ஆந்திரா : இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்களை பிவி சிந்து நடனம் ஆடும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
பேட்மிண்டன் களத்தில் ஆக்ரேஷமாக விளையாடும் பிவி சிந்து தீபாவளிக்கு புத்தம் புதிய உடையை போட்டுக்கொண்டு மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோ வெளியான ஒரே நாளில் 1.2 மில்லியன் பார்வைகளைப் பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது.

பிவி சிந்து
26 வயதான பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் டோக்கியோவில் வெண்கலப் பதக்கமும் வென்று தொடர்ச்சியாக இரண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

உற்சாக நடனம்
இரண்டு ஒலிம்பிக் பதக்கம், பத்ம பூஷன் விருது என மகிழ்ச்சியாக இருக்கும் பிவி சிந்து, தனது இன்ஸ்டாகிராமில் CKay இன் 'Love Nwantiti' என்ற பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடிய வீடியோ வெளியிட்டுள்ளார். கடல் பச்சை நிற கஞ்சீவரம் லெஹங்கா உடையில், பிவி சிந்து அனைவரையும் கவரும் வகையில் நடனம் ஆடிஉள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட ஒரே நாளில் 1.2 மில்லியன் பார்வைகளைப் பெற்று வைரலாகி உள்ளது.

பத்ம பூஷன் விருது
புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தார். "இது ஒரு பெருமையான தருணம். இந்த விருதை எனக்கு வழங்கியதற்காக இந்திய அரசு, அனைத்து அமைச்சர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் சார் ஆகியோருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார்.

சிறப்பாக செயல்படுவேன்
மேலும் பேசிய அவர், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இதுபோன்ற விருதுகள் எங்களுக்கு நிறைய ஊக்கத்தையும் ஆதரவையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. வரும் எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்படுவேன்" என்று பத்ம பூஷன் விருதை பெற்ற பிறகு பிவி சிந்து கூறினார்.