»   »  பாகு - பலி?

பாகு - பலி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி - 2 இன்று நள்ளிரவு வெளிநாடுகளிலும் நாளை இந்தியா முழுமையும் ரீலீஸ் ஆக உள்ளது.தமிழ்நாட்டில் இதுவரை எந்த மொழி மாற்று தமிழ் படங்களுக்கும் இல்லாத வகையில் பாகுபலி - 2 படத்திற்கு விலை நிர்ணயிக்கப்பட்டு, விநியோகஸ்தர்கள், மற்றும் தியேட்டர்களில் அட்வான்ஸ், எம்.ஜி, என 69 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. சுமார் 99 கோடி ரூபாய் தமிழ்நாடு தியேட்டர்களில் டிக்கட் மூலம் வசூல் ஆனால் மட்டுமே 69 கோடி அசல் வரும். 99 கோடிக்கு மேல்வசூல் ஆனால் முதலீடு செய்த விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

47 கோடி ரூபாய்க்கு கிரீன் புரொடக்க்ஷன்ஸ் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை வாங்கியது. ஏரியா அடிப்படையில் கோவை - 8 கோடி, நெல்லை - 3.25 கோடி சேலம் - 4.50 கோடி திருச்சி ஏரியா - 6 கோடி சிட்டி , செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு - 22 கோடி என விற்பனை செய்யப்பட்டது. இந்தப் படத்தை வாங்குவதற்கு பைனான்ஸ் கொடுத்தவருக்கு மதுரை ஏரியா விலை குறிப்பிடாமல் ஒதுக்கப்பட்டது.


Bagubali 2.. Finally all disputes settled

கோவை விலையை ஒப்பிட்டு மதுரைக்கு 7 கோடி என விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். படம் வாங்குபவர் மதுரை பைனான்சியர்களிடம் கடன் வாங்கி விட்டால் மதுரை ஏரியாவை வேறு யாரும் அவுட் ரேட் அடிப்படையில் கேட்டால் கூட கொடுக்க முடியாது. அது தான் மதுரை பைனான்சியர்கள் அடிப்படை விதி. இந்த விதியை மீறமுடியாமல் தமிழ் சினிமாவில் குடைசாய்ந்த கோபுரங்கள் ஏராளம். மீள முடியாமல் இன்றும் துயரத்தை அனுபவித்து வரும் நடிகர்கள் ஏராளம்.


விஷயத்திற்கு வருவோம். வாங்கிய விலையை விட லாபத்துடன் விற்பனை செய்யப்பட்ட பாகுபலி தமிழ்நாடு விநியோகஸ்தர் ஏற்கெனவே போகன், பைரவா, கட்டப்பாவ காணோம் படங்களை ரீலீஸ் செய்ததன் மூலம் கோடிக்கணக்கில் நஷ்டம். அனைத்து ஏரியா விநியோகஸ்தர்களுக்கும் பாக்கி. பைனான்சியருக்கு பாக்கி. சுமார் 22 கோடி தன்னுடைய கடனை இந்த படத்தின் மூலம் வசூல் செய்ய பைனான்சியர் திட்டமிட்டதன் விளைவு லாபகரமாக முடிந்த வியாபாரம், குறைந்தபட்ச லாபம் அல்லது நஷ்டம் என முடிந்திருக்க வேண்டிய பாகுபலி வரவு செலவு இன்று அனைவரையும் பதட்டத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.


பாகுபலி தமிழ்நாடு விநியோகஸ்தர் சரவணன் கடன் பாகுபலி விலையுடன் 22 கோடி டெபிசிட் இணைக்கப்பட்டது. இது 9 ஏரியா விலை அடிப்படையில் சதவீதக் கணக்கில் விநியோகஸ்தர்கள் கூடுதல் அட்வான்சாக தர வேண்டும் என நாட்டாமைகள் ஒவ்வொரு விநியோகஸ்தரையும் தனியாக அழைத்து நெருக்கடி கொடுத்துள்ளனர். முடியாது எனில் படம் கிடையாது, கொடுத்த அட்வான்ஸ் திருப்பிக் கிடைக்காது என்ற நெருக்கடி. வேறு வழி இன்றி கூடுதல் தொகை கொடுக்க விநியோகஸ்தர்கள் ஒப்புக் கொண்டதால் தமிழ் நாட்டில் பாகுபலி ரீலீஸ் உறுதியானது.


ஒரு திரைப்படம் விலை பேசி முடித்து அட்வான்ஸ் கொடுத்து விட்டால் முழுப் பணத்தையும் கொடுத்து விநியோகஸ்தர் டெலிவரி எடுக்க வேண்டும். முடியவில்லை என்றால் தயாரிப்பாளரோ, வேறு விநியோகஸ்தரோ படத்தை ரீலீஸ் செய்வார்கள். அட்வான்ஸ் திருப்பித் தரப்படும். அதே நேரம் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு வேறு வகையில் கடன் இருந்து அது பட வெளியீட்டுக்கு தடையாக இருந்தால் விநியோகஸ்தர் கூடுதல் பணம் கொடுக்கத் தேவையில்லை. இது தான் விநியோகத் தொழிலில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை.


சங்கங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை புகாரின் அடிப்படையில் பேசித் தீர்க்க உருவாக்கப்பட்ட அமைப்பு தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு. காலப்போக்கில் குறிப்பிட்ட பைனான்சியர்கள், படங்கள் வாங்காத பழம் தின்னு கொட்டை போட்ட விநியோகஸ்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் அதிகார மையமாகி விட்டது. இவர்கள் எந்தப் பொறுப்பிலும் இருக்க மாட்டார்கள். பொறுப்பில் இருப்பவர்கள் இவர்கள் சொல்வதைக் கேட்கும் நபர்களாக இருப்பார்கள்.


மதுரை அன்பு செழியன், அருள்பதி, திருப்பூர் சுப்பிரமணி இவர்கள் கூறுவதை அல்லது நினைப்பதை அமுல்படுத்தும் அமைப்பாக கூட்டமைப்பு செயல்படுவதாக கூறப்படுகிறது. சரவணன் பைனான்ஸ் வாங்கியிருப்பது மதுரை அன்புவிடம். அவரது பாக்கியை வசூல் செய்யவே பாகு பலி பட பஞ்சாயத்தில் விநியோக தொழில்முறைகளுக்கு எதிராக முடிவுகள் திணிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட போவது 7 விநியோகஸ்தர்களும், எம்.ஜி. அடிப்படையில் படம் திரையிட்டுள்ள தியேட்டர் உரிமையாளர்களுமே. இந்தப் படத்தின் வெற்றி தோல்வி தமிழ் திரைப்பட விநியோகம், திரையிடல் இரண்டு துறைகளிலும் கடுமையான பொருளாதார நெருக்கடியை உருவாக்கி, தொழில் முடங்கும் அபாயம் உறுதி. பாகு பலி...பாகு - பலியாகமல் இருக்குமா?


நாளை கிரீன் புரொடக்ஷன் - குடைசாய்ந்த சரவணன் - காரணம் - யார்?


- ஏகலைவன்

English summary
After many disputes finally Bagubali is releasing in Tamil Nadu tomorrow as per schedule. Here is the story behind the disputes and release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil