»   »  'இதான்டா பக்கா ப்ளான்'.... பாகுபலி 2 ரிலீசுக்கு முன்பாக பாகுபலி முதல்பாகம் மறுவெளியீடு!

'இதான்டா பக்கா ப்ளான்'.... பாகுபலி 2 ரிலீசுக்கு முன்பாக பாகுபலி முதல்பாகம் மறுவெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவை ஒரு தொழிலாக எடுத்துக் கொண்டு, சரியான திட்டமிடல், நேர்த்தியான உழைப்பு என செயல்பட்டால், அது தங்கச் சுரங்கம்!

Select City
Buy Baahubali - The Beginning (Part I) (U/A) Tickets

இதை நன்று உணர்ந்தவர் இயக்குநர் ராஜமௌலி. பாகுபலி முதல் பாகத்தை அத்தனை திட்டமிடலோடு வெளியிட்டு இந்திய சினிமாவை வாய் பிளக்க வைத்தார். இப்போது பாகுபலி 2-க்கு அதைவிட நேர்த்தியான திட்டமிடலை மேற்கொண்டு வருகிறார்.


Bahubali 1 to release again before Bahubali: The Conclusion on April 7

பாகுபலி 2 வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன், பாகுபலி முதல் பாகத்தை உலகெங்கும் வெளியிடப் போகிறாராம். காரணம் ஏப்ரல் 2-ம் வாரத்திலிருந்து மக்களை பாகுபலி மூடிலேயே வைத்திருந்தால், இரண்டாம் பாகத்தைப் பார்க்கும்போது இன்னும் சுவாரஸ்யம் கூடும் என்பதால்.


தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என முக்கிய மொழிகளில் பாகுபலி 2-க்கு முன் முதல் பாகம் வெளியாகப் போகிறது.


இது வரை ஒரு படத்துக்கு இரண்டாம் பாகம் படமெடுத்த எந்த இயக்குநரும் செய்யாத விஷயம் இது.

English summary
Before the release of Bahubali 2, SS Rajamouli is releasing the first part of Bahubali again all over the country.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil