»   »  3 மணி நேர பாகுபலி 2... பெருமை தருமா.. பொறுமையைச் சோதிக்குமா?

3 மணி நேர பாகுபலி 2... பெருமை தருமா.. பொறுமையைச் சோதிக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வரலாற்றுப் படம், சமூகப் படம், த்ரில்லர்... அட சூப்பர் ஸ்டார் ரஜினி படமாகவே இருந்தாலும் அதிகபட்சம் 2.30 மணி நேரம் போதும் என்கிறார்கள் ரசிகர்கள்.

குறிப்பாக த்ரில்லர் வகைப் படங்களுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.

Bahubali 2, a 3 hours extravaganza!

இப்படி ஒரு சூழலில் வெளியாகும் பாகுபலி மட்டும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக் கூடிய படமாக வருகிறது.

பாகுபலி 2 படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள். அதாவது இடைவெளியையும் சேர்த்தால் 3.15 மணி நேரம்.

பாகுபலி முதல் பாகம் 2.30 மணி நேரம்தான். அட அதுக்குள்ள முடிஞ்சிடுச்சே என்று சொல்லும் அளவுக்கு வேகமாக ஓடி முடிந்தது அந்தப் படம். ஆனால் இரண்டாம் பாகத்தில்தான் முக்கிய காட்சிகள், திருப்பங்கள் இடம்பெறுகின்றன. எனவேதான் இந்தப் படம் அரை மணி நேரம நீளம் அதிகம் என்கிறது படக்குழு.

சுவாரஸ்யம், பிரமாண்டம் படம் முழுக்கத் தொடர்ந்தால் அந்த மூன்று மணி நேரம் பெரிய விஷயமில்லை... இல்லையென்றால்தான்... கஷ்ட்ட்டம்!

English summary
Sources say that the total length of SS Rajamouli's Bahubali 2 is 3 hours.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil