»   »  முத்து வசூலைத் தொடக்கூட முடியாத பாகுபலி... இது எங்கே தெரியுமா?

முத்து வசூலைத் தொடக்கூட முடியாத பாகுபலி... இது எங்கே தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
முத்து வசூலைத் தொடக்கூட முடியாத பாகுபலி...

இந்திய அளவில் இனி ஒரு படம் எடுத்து இந்த வசூலை முறியடிப்பது கூட சிரமம் என்ற ஒரு சாதனையை படைத்திருக்கிறது பாகுபலி 2. ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் அந்த படத்தால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து பட வசூலை நெருங்கக் கூட முடியவில்லை. உங்கள் கணிப்பு சரிதான்... ஜப்பானில்தான் இந்த சாதனை.

முத்து படத்தை பல ஆண்டுகள் கழித்துதான் ஜப்பான் நாட்டில் வெளியிட்டார்கள். யாரும் எதிர்பாராத வகையில் ஜப்பான் ரஜினியின் கோட்டை ஆனது. ஜப்பானில் முத்து படத்தின் கலெக்‌ஷன் சுமார் 15 லட்சம் யுஎஸ் டாலர்கள். இது அப்போதைய மதிப்புக்கு.

Bahubali 2 failes to touch Rajinikanth's Muthu

ஆறு வாரங்களுக்கு முன்பு பாகுபலி 2 ஜப்பானில் வெளியானது. இதுவரை 5.50 லட்சம் யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளதாம்.

உலகம் முழுதும் 1700 கோடி வரை வசூல் சாதனை படைத்த பாகுபலியால் ஜப்பானில் மட்டும் சூப்பர் ஸ்டாரை தொட முடியவில்லை.

English summary
The world record Bahubali has failed even touch the collection of Rajinikanth's Muthu in Japan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil