»   »  பாகுபலி 2 காட்சிகள் ரத்தானதால் ரூ 1 கோடி இழப்பு!

பாகுபலி 2 காட்சிகள் ரத்தானதால் ரூ 1 கோடி இழப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் பாகுபலி 2 படத்தின் சிறப்புக் காட்சி மற்றும் காலைக் காட்சிகள் ரத்தானதால் ரூ 1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பாகுபலி 2 படம் ஆரம்பத்திலிருந்தே தமிழகத்தில் சிக்கலைச் சந்தித்து வருகிறது. இந்தப் படத்தின் விநியோக முறையில் வழக்கத்துக்கு மாறான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.


Bahubali 2 morning shows cancellation caused for Rs 1 cr loss

பாகுபலி 2 வியாபாரம் லாபத்தில் முடிந்தாலும், பைரவா, போகன் போன்ற படங்களில் ஏற்பட்ட நஷ்டம், பாகுபலியை கடுமையாக பாதித்துவிட்டது. அந்தப் படங்களில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு, பாகுபலி வியாபாரத்தில் ஈடுகட்ட முயன்றதால் ரூ 22 கோடி பற்றாக்குறையில் இந்தப் படம் வெளியாக முடியாமல் தடுமாறியது.


இதனால் உலகம் முழுவதும் படம் வெளியாகியும், தமிழகத்தில் மட்டும் வெளியாகவில்லை. இன்று அதிகாலை மற்றும் காலைக் காட்சிகளுக்கு டிக்கெட் எடுத்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளானார்கள்.


இதனால் ரூ 1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Due to the cancellation of Bahubali 2 morning shows, theaters incurred the loss of Rs 1 cr in Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil