»   »  பாகுபலி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகுபலி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த எஸ்எஸ் ராஜமௌலியின் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி.

Bahubali 2 release date officially announced

ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகுபலி 2 படம் வெளிவருகிற தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஏப்ரல் 28 அன்று படம் வெளிவருகிறது. கோடை விடுமுறை ஸ்பெஷலாக படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    The official release date of Bahubali 2 has been announced.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil