»   »  ரிலீசுக்கு முன்பே ரூ 500 கோடிக்கு வியாபாரம்... பாகுபலி 2-ன் அடுத்த சாதனை!

ரிலீசுக்கு முன்பே ரூ 500 கோடிக்கு வியாபாரம்... பாகுபலி 2-ன் அடுத்த சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் பாகுபலி 2 படத்தின் வர்த்தகம் ரிலீசுக்கு முன்பே பிரமிக்க வைப்பதாக உள்ளது.

இந்தப் படம் ரூ 500 கோடி வரை விற்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Bahubali 2's distribution sales sets new record

கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற பாகுபலியின் தொடர்ச்சி இந்த பாகுபலி 2. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக செலவிலும், முக்கியத் திருப்பங்கள் கொண்ட வரலாற்றுத் த்ரில்லராகவும் உருவாகியுள்ளது.

இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பிரமிக்க வைக்கும் அளவு உள்ளது. எனவே படத்தை வாங்க பெரும் போட்டி நடந்தது.

பாகுபலி 2 ஏரியாவாரியாக விற்கப்பட்ட தொகை...

மேற்கு கோதாவரி - ரூ.8.5 கோடி
கிழக்கு கோதாவரி - ரூ.9.5 கோடி
நெல்லூர் - ரூ.5.6 கோடி
குண்டூர் - ரூ.11.6 கோடி
உத்தராந்திரா (விசாகப்பட்டினம் ) - ரூ.13.27 கோடி
கிருஷ்ணா - ரூ.9 கோடி
ராயலசீமா - ரூ.27 கோடி
நிஜாம் - ரூ.50 கோடி

தமிழ்நாடு விநியோக உரிமை - 27 கோடி

கர்நாடகா - ரூ.45 கோடி

கேரளா - ரூ. 10.5 கோடி

இந்தி - ரூ.120 கோடி

வட அமெரிக்கா & கனடா - ரூ.45 கோடி

பிறநாடுகள் - இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.

சாட்டிலைட் உரிமம்

இந்தி - ரூ.51 கோடி + வரி

தெலுங்கு - ரூ.26 கோடி

தமிழ், மலையாளம் - இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.

ஆடியோ உரிமை இன்னும் யாருக்கும் தரப்படவில்லை.

இதுவரையில் பார்க்கும்போது 'பாகுபலி-2' ரூ.478 கோடியே 97 லட்சத்திற்கு வியாபாரம் ஆகியுள்ளது. இன்னும் சில ஏரியாக்களின் உரிமையும், சாட்டிலைட், ஆடியோ உரிமையும்கணக்கில் எடுக்கப்படாமல் உள்ளது. இவற்றையும் சேர்த்தால், இப்படம் ரீலீசுக்கு முன்பே ரூ.500 கோடியை குவித்துவிடும்.

    English summary
    Sources say that SS Rajamouli's Bahubali has collected Rs 500 cr even before release.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil