»   »  அதிகாலையிலேயே பாகுபலி 2 பார்க்கப் போய் ஏமாந்த சென்னை, கோவை ரசிகர்கள்!

அதிகாலையிலேயே பாகுபலி 2 பார்க்கப் போய் ஏமாந்த சென்னை, கோவை ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக ரஜினி படங்களுக்குத்தான் நள்ளிரவு 1 மணிக்கு முதல் ஷோ காட்டுவார்கள். ரசிகர்களுக்காக இந்த சிறப்பு சலுகை. அடுத்த விஜய், அஜீத் படங்களுக்கும் அதிகாலை 5 மணிக்கு சிறப்புக் காட்சி போடுவது வழக்கமாகிவிட்டது.

தெலுங்கு நடிகர்கள் நடித்திருந்தாலும் பாகுபலி 2 -க்கும் ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கு இணையான முக்கியத்துவத்தை ரசிகர்கள் தந்திருக்கிறார்கள். இந்தப் படமும் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சிறப்புக் காட்சி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


Bahubali 2 special show cancelled

சிறப்புக் காட்சிக்கான கட்டணம் ரூ 500. இவ்வளவு அதிக விலைக் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்க்கவும் இன்று காலை பெரும் கூட்டம் காத்திருந்தது கோயம்பேடு ரோகிணி திரையரங்கில். ஆனால் க்யூபுக்கான கேடிஎம் வரவில்லை என்று காட்சியை ரத்து செய்துவிட்டார்கள் (சிம்பிளாக பொட்டி வரல). வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏகக் கடுப்பில் கலைந்து சென்றார்கள்.


கோவையிலும் இதே கதைதான். காரணம் படத்துக்கான பைனான்ஸ் சிக்கல் இன்னும் தீரவில்லை என்கிறார்கள்.

English summary
The early morning special show of Bahubali 2 was cancelled in Chennai and Kovai Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil