»   »  அனுஷ்காவுடன் அம்பு விடும் பிரபாஸ்.... பாகுபலி 2 தமிழ் டிசைன் வெளியானது!

அனுஷ்காவுடன் அம்பு விடும் பிரபாஸ்.... பாகுபலி 2 தமிழ் டிசைன் வெளியானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரையுலகம் மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படங்களில் ஒன்றான பாகுபலி இரண்டாம் பாகத்தின் தமிழ்ப் போஸ்டர்கள் இன்று வெளியாகின.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சரித்திரம் படைத்த படம் பாகுபலி. எஸ்எஸ் ராஜமௌலி இயக்கிய இந்தப் படம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்தியாவில் தயாரான ஒரு பிராந்திய மொழிப் படம் உலக அளவில் இப்படி ஒரு வெற்றியைப் பெற்றதில்லை என்று சினிமா ஆர்வலர்கள் பாராட்டினர்.

Bahubali 2 Tamil posters released

அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2017-ல் வெளியாகும் என அறிவித்த இயக்குநர் ராஜமௌலி, சொன்னபடி படப்பிடிப்பை முடித்து, வரும் ஏப்ரல் மாதம் வெளியிடுவதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளார்.

பாகுபலி தமிழ், தெலுங்கில் நேரடிப் படமாகவே தயாராகியுள்ளது. இந்தியில் டப் செய்யப்படுகிறது. இந்தப் படத்தின் தெலுங்கு போஸ்டர்கள் முன்பு வெளியாகின. இப்போது தமிழ்ப் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் அனுஷ்காவும் பிரபாஸும் அம்பு எய்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. முதல் பாகத்தில் வயதான தோற்றத்தில் வந்த அனுஷ்கா, இந்தப் படத்தின் இளமையாக அழகாகக் காட்சியளிக்கிறார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

English summary
The much expected Bahubali 2 Tamil posters have released Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil