»   »  பாகுபலி 2 ட்ரைலருக்குக் கிடைத்த வரலாறு காணாத வரவேற்பு.... திரையுலகம் பிரமிப்பு!

பாகுபலி 2 ட்ரைலருக்குக் கிடைத்த வரலாறு காணாத வரவேற்பு.... திரையுலகம் பிரமிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி 2 ட்ரைவர் சுமார் என்றும் சூப்பரோ சூப்பர் என்றும் வெவ்வேறு கருத்துகள் இருந்தாலும், அதன் ட்ரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு இந்திய திரையுலகையே பிரமிக்க வைத்துள்ளது.

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் பாகுபலி - தி கன்க்ளூசன் என்ற பெயரில் வெளியாகிறது.

Bahubali 2 trailer sets new record

வரும் ஏப்ரல் மாதம் இந்தப் படம் வெளியாகிறது. படத்தின் வர்த்தகம் ரூ 500 கோடியைத் தாண்டிவிட்டது.

இந்த நிலையில் படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்திப் பதிப்புகளின் முதல் ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியானது. யுட்யூபில் இந்த ட்ரைலருக்கு ஏக வரவேற்பு.

இந்த இரு தினங்களில் அனைத்து மொழி ட்ரைலர்களையும் மொத்தம் 6.50 கோடி முறை பார்த்துள்ளனர் (Views). தெலுங்கில் 2.7 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

தமிழில் 38 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்தியில் 1.89 கோடி பார்வைகள் இந்த ட்ரைலருக்குக் கிடைத்துள்ளன.

இதுவரை ரஜினியின் கபாலி பட டீசர்தான் இந்திய சினிமாவின் உச்சபட்ச பார்வைகளைப் பெற்றுள்ள படமாக உள்ளது. இந்தப் படம் தமிழில் மட்டும் 3.3 கோடிக்கும் அதிகமாகப் பெற்றுள்ளது. தெலுங்கு, இந்தியில் சேர்த்து 1.5 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது (மொத்தம் 4.8 கோடி).

கபாலியின் தமிழ் பதிப்பு சாதனையை தெலுங்கு பாகுபலி 2 ட்ரைலர் முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது.

  English summary
  Bahubali 2 trailer is set a new record in Indian cinema by getting 4.89 cr views in 2 days.
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil