»   »  தொலைக்காட்சி உரிமை... ரஜினி பட சாதனைகளை மிஞ்சிய பாகுபலி 2!

தொலைக்காட்சி உரிமை... ரஜினி பட சாதனைகளை மிஞ்சிய பாகுபலி 2!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ்எஸ் ராஜமௌலியின் பாகுபலி 2 படம், வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளைப் படைக்க ஆரம்பித்துள்ளது.

தெற்கில் இதுவரை ரஜினி படங்களை மட்டுமே பெரும் விலை கொடுத்து வாங்கி வந்தன தொலைக்காட்சி நிறுவனங்கள்.

Bahubali 2 TV rights price sold out for whopping price

அந்த சாதனையை உடைத்துள்ளது பாகுபலி 2. இந்தப் படத்தை ரூ 51 கோடி கொடுத்து ஒரு தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிப் பதிப்புகளுக்கும் சேர்த்த விலை இது.

சூப்பர்ஸ்டார் ரஜினி படம் அல்லாத வேறொரு படம் இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்கப்படுவது இதுவே முதல்முறை.

ரஜினி படங்களின் தமிழ்ப் பதிப்பு மட்டுமே ரூ 40 கோடி வரை விற்பனையாகும். தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திப் பதிப்புகள் விலை தனி.

முன்னதாக 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் ரூ.45 கோடிக்கு விலைபோனது குறிப்பிடத்தக்கது.

வரலாறு காணாத எதிர்ப்பார்ப்புக்கிடையே பாகுபலி 2 ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகவிருக்கிறது.

English summary
SS Rajamouli's Bahubali 2 tv rights sold out for a whopping price.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil