»   »  பாகுபலி முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பாகுபலி முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்திய சினிமாவின் பிரமாண்ட படமான எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி, முதல் நாளில் மட்டும் ரூ 30 கோடியை வசூலித்துள்ளது.

Select City
Buy Baahubali 2: The Conclusion (U/A) Tickets

பாகுபலி படம் நேற்று உலகெங்கும் 4000 அரங்குகளுக்கு மேல் வெளியானது. இந்தியாவில் மட்டும் 3000-க்கும் அதிகமான அரங்குகளில் இந்தப் படம் வெளியானது.


அமெரிக்காவில் படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக போடப்பட்ட சிறப்புக் காட்சிகள் மூலம் மட்டுமே 1 மில்லியன் டாலர்களை வசூலித்து, ஆமீர் கானின் பிகே பட சாதனையைத் தகர்த்தது பாகுபலி.


வட மாநிலங்களில்

வட மாநிலங்களில்

இந்தியாவில் நேற்று வட மாநிலங்களில் கணிசமான அரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான இந்தப் படத்துக்கு 80 சதவீத பார்வையாளர்கள் வந்திருந்தனர். ஆரம்பத்தில் தியேட்டர்களில் கூட்டம் குறைவாக இருந்தாலும், படம் குறித்த செய்திகள், மவுத் டாக் மூலம் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.


கேரளாவில்

கேரளாவில்

தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகாவில் படத்துக்கு செம கூட்டம். கேரளாவில் நேற்று தியேட்டர்கள் ஸ்ட்ரைக் காரணமாக, மால்களில் உள்ள 60 அரங்குகளில்தான் படம் வெளியானது. இன்று மேலும் 70 அரங்குகளில் பாகுபலி வெளியாக உள்ளது.


ரூ 30 கோடிக்கும் மேல்

ரூ 30 கோடிக்கும் மேல்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சேர்த்து நேற்று ஒரு நாள் மட்டுமே வசூலான தொகை ரூ 30 கோடிக்கும் மேல் என பாக்ஸ் ஆபீஸ் தகவல் கிடைத்துள்ளது. பிரதான முதல் நிலை நடிகர்கள் யாரும் இல்லாத இந்தப் படத்தில், அதன் இயக்குநர் ஒருவரை நம்பி மக்கள் கொடுத்த வசூல்தான் இந்த முப்பதுகோடி ப்ளஸ் தொகை.


ரூ 100 கோடியைத் தாண்டும்

ரூ 100 கோடியைத் தாண்டும்

இன்றும் நாளையும் அடுத்த வாரம் முழுவதும் தென்னகத்தில் இந்தப் படத்துக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன. எனவே முதல் மூன்று நாட்களில் இந்தப் படம் எப்படியும் ரூ 100 கோடியை நெருங்கிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


English summary
SS Rajamouli's Tamil - Telugu magnum opus Bagubali has collected Rs 30 cr on its very first day across the globe.
Please Wait while comments are loading...