»   »  தாண்டியது 100 கோடியை.. ஆரம்ப வசூலில் அத்தனை இந்தியப் படங்களின் சாதனைகளையும் தகர்த்தது பாகுபலி!

தாண்டியது 100 கோடியை.. ஆரம்ப வசூலில் அத்தனை இந்தியப் படங்களின் சாதனைகளையும் தகர்த்தது பாகுபலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு படத்தின் ஆரம்ப வசூல்தான் இன்றைக்கு அந்தப் படத்தின் தலைவிதியை நிர்ணயிக்கிறது. அதிலும் பிரமாண்டப் படங்களுக்கு ஆரம்ப வசூல் மிக முக்கியம்.

அந்த வகையில் கடந்த மூன்று தினங்களில் ரூ 100 கோடிக்கு மேல் குவித்து சாதனைப் படைத்துள்ளது பாகுபலி.

அமெரிக்காவில் வியாழனன்று திரையிடப்பட்ட சிறப்புக் காட்சியிலேயே இந்தப் படம் 1.3 மில்லியன் டாலர்களைக் குவித்தது. தொடர்ந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமை தலா 1 மில்லியன் என குவித்தது. மூன்று நாட்களில் தமிழ், தெலுங்கு, இந்தி பதிப்புகள் ரூ 23 கோடியைக் குவித்து அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனைப் படைத்தது.

வட இந்தியாவில்..

வட இந்தியாவில்..

படம் வெளியான வெள்ளிக்கிழமை வட இந்தியாவில் 70-80 சதவீதம் வரைதான் இருக்கைகள் நிரம்பின. ஆனால் அடுத்த நாளிலிருந்து நல்ல முன்னேற்றம். 90 சதவீத பார்வையாளர்கள் வர ஆரம்பித்தனர். இந்த மூன்று நாட்களில் வட இந்தியாவில் மட்டும் ரூ 15 கோடியைக் குவித்துள்ளது பாகுபலி இந்தி.

தமிழுக்கு பெரும் வரவேற்பு

தமிழுக்கு பெரும் வரவேற்பு

இந்தப் படம் நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கில் நேரடிப் படமாக வந்துள்ளது. மலையாளம் மற்றும் இந்தியில் டப் செய்துள்ளனர். வட இந்தியாவில் தமிழில் இந்தப் படத்தைக் காண பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் திரண்டது, தியேட்டர் நிர்வாகத்தை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

தெலுங்கு மக்கள்

தெலுங்கு மக்கள்

அமெரிக்காவைப் பொருத்தவரை தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டுமே சிறப்பான வரவேற்பு மற்றும் அதிக அளவிலான பார்வையாளர்களுடன் தொடர்கிறது.

இந்திய சினிமாவில் முதல் முறையாக...

இந்திய சினிமாவில் முதல் முறையாக...

பாகுபலி படம் முதல் நாளில் ரூ 30 கோடியைக் குவித்ததாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்திகள் வெளியாகின. ஆனால் உண்மையில் முதல் நாளே ரூ 50 கோடியைத் தாண்டிவிட்டது இதன் வசூல். இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த முதல் படம் பாகுபலிதான். ரஜினி, ஷாரூக்கான், ஆமீர்கான் படங்களின் வசூல்களையெல்லாம் மிஞ்சிய சாதனை வசூல் இது.

ரூ 100 கோடி...

ரூ 100 கோடி...

பாகுபலி படம் இந்த மூன்று நாட்களில் ரூ 100 கோடி வசூலைத் தாண்டிவிட்டது என்று பாக்ஸ் ஆபீசில் உறுதியாகக் கூறினாலும், தொகை எவ்வளவு என்பதை இன்னும் துல்லியமாக வெளியிடவில்லை. ஆனால் வருகின்ற தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, இந்தப் படம் ரூ 140 கோடி வரையில் குவித்திருக்க வாய்ப்புள்ளது.

எப்படிப் பார்த்தாலும் இது மிகப் பெரிய ஆரம்ப வசூல். இந்திய சினிமாவை இன்று உலகமே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது பாகுபலி என்ற இந்த தென்னிந்திய சினிமா!

English summary
SS Rajamouli's Bahubali has created a new record in box office by its opening day collection.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil