»   »  விடாது வீசும் பாகுபலி புயல் … சிவனைத் தூக்கிய கணபதி…

விடாது வீசும் பாகுபலி புயல் … சிவனைத் தூக்கிய கணபதி…

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி படத்தின் பாதிப்பு டுவிட்டர்வாசிகளுக்கு 50 நாட்கள் ஆனாலும் விடாது போலிருக்கிறது... படத்தைப் பற்றி எதையாவது போட்டு டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.

லிங்கத்தை ஏந்திய சிவாவைப் போல பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளுக்கு ப்ளெக்ஸ் பேனர் வைத்தார்கள்.
ஏன்பா... என் இப்படி என்று கேட்டாலும் இரவு நேரங்களில் ரகசியமாக நகர்வலம் வந்த ரங்கசாமி தன்னுடைய பேனர்களைப் பார்த்து ரசித்தாராம். அதேபோல இப்போது இந்தக்கட்டுரை அதைப்பற்றியதல்ல. பாகுபலி புயல் இன்னமும் வீசிக்கொண்டிருக்கிறது என்பதைப்பற்றித்தான்.

பாகுபலி படத்தை பார்த்த பாதிப்பில் விநாயகர் கூட சிவனை தூக்கிச் செல்வது போல சிலை வடித்திருக்கின்றனர். இந்த விநாயகர் சதுர்த்திக்கு இந்த சிலைதான் ஸ்பெஷல் என்கின்றனர் சிலை வடிவமைப்பாளர்கள்.

விநாயகரையும் விடலையே

செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சிலை செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. கார்க்கில் போர் நடந்த போது கார்க்கில் விநாயகர் செய்த மக்கள் இப்போது பாகுபலி விநாயகரை வடிவமைத்துள்ளனர்.

பாகுபலி விநாயகர்

பெங்களூரு நகர வீதிகளில் அலங்காரமாய் அணிவகுத்து நிற்கும் பாகுபலி விநாயகரை மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

பாகுபலி பிறந்த ஆடி அமாவாசை

மகிழ்மதியின் முடி மன்னனும், கட்டப்பாவால் முதுகில் குத்தி கொலை செய்யப்பட்டவரருமாகிய மாவீரர் அமரேந்தர் பாகுபலி பிறந்த தினம் என்று போனவாரம் ஆடி அமாவாசை நாளில் ஸ்டேட்டஸ் போட்டு கலக்கியுள்ளனர் வலைஞர்கள். என்னா ஒரு பாகுபலி பாசம்.

எது மரணம் தெரியுமா?

போர்களத்தில் மரணபயத்தில் புறமுதுகிட்டு ஓடும் வீரர்களிடம் பாகுபலி பேசும் வீர வசனம்...தெறிமாஸ்... படம் பார்த்துவிட்டு வந்த உடன் ஒவ்வொரு வரும் டுவிட்டரில் ஸ்டேட்டஸ் போட மறப்பதில்லை.

சொல்லுங்க மோடி ஜீ

பாகுபலியை கொன்றது தான்தான் என்று கடைசியில் ஒருவார்த்தை சொன்னாலும் சொன்னார் கட்டப்பா. படம் பார்த்தவர்களின் மனதில் எல்லாம் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் கேள்விதான் குடைந்து கொண்டிருக்கிறது. இதோ துபாய் போன மோடியிடம் கூட இந்த கேள்விதான் கேட்கப்பட்டதாமே?

கபாலியை விரட்டுறாங்களே

பாகுபலி புயல் ஒருபக்கம் வீசினாலும், ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு கபாலி என்று வந்தாலும் வந்தது... விடுவார்களா நம் மக்கள், விடாமல் விரட்ட ஆரம்பித்து விட்டனர்.

English summary
Bahubali, the movie which took box-office by storm has also inspired Ganesha idol makers as many of them are depicting the elephant -headed god as carrying Shiva Lingam in their statues this year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil