»   »  மே 15-ம் தேதி வெளியாகிறது ராஜமவுலியின் பிரமாண்ட பாகுபலி!

மே 15-ம் தேதி வெளியாகிறது ராஜமவுலியின் பிரமாண்ட பாகுபலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்ட சரித்திப் படமான பாகுபலி வரும் மே 15-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இதனை ராஜமவுலியே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ரூ 150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள பாகுபலியில் அனுஷ்கா, பிரபாஸ், தமன்னா, ராணா, கோபிசந்த், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மூன்று மொழிகளில்

மூன்று மொழிகளில்

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது பாகுபலி. மூன்று மொழிகளிலுமே 3 டியில் இந்தப் படம் வெளியாகிறது.

ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வகையில்..

ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வகையில்..

ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வகையில் தொழில்நுட்பத்தை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளாராம் ராஜமவுலி. இந்த வரலாற்றுக் கதைக்காக அந்தக் கால நகரம் ஒன்றையே உருவாக்கி, அதில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.

இரண்டு பகுதிகள்

இரண்டு பகுதிகள்

பாகுபலி படத்தை இரண்டு பகுதிகளாக வெளியிடுகிறார் ராஜமவுலி. முதல் பாகம் 2015, மே மாதம் 15-ம் தேதி வெளியாகிறது. 2 வது பாகம் 2016 ஆம் ஆண்டு இதே கோடையில் வெளியாகவிருக்கிறது.

ராஜமவுலி அறிவிப்பு

ராஜமவுலி அறிவிப்பு

படத்தின் வெளியீடு குறித்து ராஜமவுலி வெளியிட்டுள்ள ட்வீட்டில்,"இன்று பாகுபலி குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம். ஏனென்றால் ஒரு பாடலைத் தவிர படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டது. எனவே பாகுபலி முதல் பாகத்தை மே-15 அன்று வெளியிட வேலைகள் நடந்து வருகின்றன" என கூறி உள்ளார்.

English summary
Director Rajamouli officially announced the release date of Bahubali. According to his tweet, the Film will be released on May 15.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil