»   »  பிரமாண்ட காமிக்ஸ் & வீடியோ கேமாக வெளியாகும் பாகுபலி!

பிரமாண்ட காமிக்ஸ் & வீடியோ கேமாக வெளியாகும் பாகுபலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி... கடந்த 2015-ம் ஆண்டில் இந்திய சினிமாவை நோக்கி உலக சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த படம்.

நேர்த்தி, பிரமாண்டம், வசூல் என எந்த விதத்திலும் குறை வைக்காத இந்த சாதனைப் படம், இப்போது கிராபிக்ஸ் வடிவில் வெளியாகவிருக்கிறது.


Bahubali to release in Comics & Video Game format

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது படமாக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் பாகத்தின் 50 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், மீதி 50 சதவீத படப்பிடிப்புக்கான பணிகள் நடந்து வருகின்றன.


இந்நிலையில், பாகுபலியை காமிக் புத்தமாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். அதற்கான வேலைகளிலும் மும்முரமாக களமிறங்கினர்.


Bahubali to release in Comics & Video Game format

முதல் கட்டமாக ‘பாகுபலி' காமிக் புத்தகத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘பாகுபலி' இரண்டாம் பாகம் வெளியாகும் சமயத்தில் இந்த புத்தகம் வெளியாகவிருக்கிறது.


இந்த காமிக் புத்தகத்துக்காக கிராபிக் இந்தியா நிறுவனத்துடன் இணைந்துள்ளனர் எஸ்எஸ் ராஜமவுலியும் படத்தின் தயாரிப்பாளரான அர்கா மீடியாவும். பாகுபலி வீடியோ கேம்ஸை வெளியிடவும் இந்த நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.English summary
Arka Mediaworks and acclaimed filmmaker S. S. Rajamouli, announced a partnership with leading character entertainment company, Graphic India to take to epic blockbuster film Baahubali: The Beginning, beloved by millions of fans across the country, and extend it s story world beyond movies into original comic books, novels, animation and video games.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil