»   »  பாகுபலி 2... ஒரு வருட படப்பிடிப்பு நிறைவடைந்தது.. ஏப்ரல் ரிலீஸ்!

பாகுபலி 2... ஒரு வருட படப்பிடிப்பு நிறைவடைந்தது.. ஏப்ரல் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது.

ஒரு வருடத்துக்கும் அதிகமாக நடந்த படப்பிடிப்பு எந்த சிக்கலும் இல்லாமல் நிறைவடைந்ததில் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Bahubali shooting wrapped up

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நேரடிப் படமாக தயாராகிவருகிறது 'பாகுபலி-2'. ராஜமௌலி இயக்கத்தில் தயாரான 'பாகுபலி' முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ 500 கோடிக்கு மேல் வசூலித்தது.

இப்போது அதன் இரண்டாம் பாகம் பாகுபலி - தி கன்க்ளூஷன் என்ற பெயரில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே 2-ம் பாகத்துக்கான 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மீதம் உள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு 2015-ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. ஒரு வருட காலமாக நடந்து வந்த இந்த படப்பிடிப்பு நேற்று (6-ந் தேதி) பிரபாஸ் சம்பந்தப்பட்ட காட்சியுடன் நிறைவு பெற்றது.

'பாகுபலி' இரண்டு பாகங்களையும் சேர்ந்தால் மொத்தம் 613 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. இந்திய திரையுலகில் வேறு எந்த படத்துக்கும் இவ்வளவு நாள் படப்பிடிப்பு நடந்தது இல்லை.

'பாகுபலி' படத்துக்காக மட்டும், பிரபாஸ் வேறு படங்கள் எதிலும் நடிக்காமல் 3.5 ஆண்டுகள் பாகுபலியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்றார் ராஜமௌலி.

படப்பிடிப்பு நிறைவு நாள் என்பதைக் குறிப்பிடும் வகையில் நேற்று ராஜமௌலியும் பிரபாஸும் பூசணிக் காய்களுடன் போஸ் கொடுத்தனர்.

English summary
The yearlong shooting of SS Rajamouli's Bahubali - The Conclusion has been concluded on Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil