»   »  பாகுபலி 2.. 1.8 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்த பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக்

பாகுபலி 2.. 1.8 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்த பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் பாகுபலி 2-ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி.

எஸ்எஸ் ராஜமௌலி இயக்கிய இந்தப் படம் ரூ. 500 கோடிக்கு மேல்வ வசூலித்து பல சாதனைகளைச் செய்தது.

பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 28 அன்று படம் வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மும்பை திரைப்பட விழாவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இடி மின்னல் பின்னணியில், நாயகன் பிரபாஸின் ஆக்ரோஷத் தோற்றம் இதில் வெளியிடப்பட்டது.

English summary
SS Rajamouli's Bahubali 2 first look was launched at Mumbai
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil