»   »  டிசம்பர் 23-ல் விஜய்யின் பைரவா ஆடியோ... ஆனால்?

டிசம்பர் 23-ல் விஜய்யின் பைரவா ஆடியோ... ஆனால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் பொங்கல் ஸ்பெஷலான பைரவா படத்தின் இசை வெளியீடு நடக்குமா நடக்காதா என அவரது ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், அதற்கான தேதியை மட்டும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி வரும் டிசம்பர் 23-ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியாகவிருக்கிறது. ஆனால் பெரிய நிகழ்ச்சி எதுவும் இல்லாமல் சாதாரணமாக இணையதளத்தில் இசையை வெளியிடப் போகிறார்களாம்.


Bairava audio from Dec 23

விஜய் படத்துக்கு முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு லஹரி நிறுவனம் இந்தப் படத்தின் பாடல் உரிமையைப் பெற்று வெளியிடுகிறது. 22-ம் தேதி பாடல்கள் பட்டியலை இந்த நிறுவனம் வெளியிடவிருக்கிறது. அதேபோல ரொம்ப நாளைக்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு பாடல்கள் எழுதியுள்ளார் வைரமுத்து.


அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கியுள்ள பைரவாவில், ஜெகபதி பாபு மற்றும் டேனியல் பாலாஜி வில்லன்களாக நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.


பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதியே பைரவாவை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

English summary
Producers of Vijay's Bairava have confirmed that the audio of the movie would be launched on Dec 23rd.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil