»   »  விஜய்யின் பைரவா... முதல் முறையாக 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ரிலீஸ்!

விஜய்யின் பைரவா... முதல் முறையாக 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் கேரியரிலேயே முதல் முறையாக பைரவா படத்தை 50-க்கும் அதிகமான நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியிடுகிறார்கள். இவற்றில் பெரும்பாலான நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பரதன் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா வரும் ஜனவரி 12-ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக உலகெங்கும் வெளியாகிறது.

Bairava to release in 50 plus countries

இந்தப் படத்தின் வியாபாரம் இதுவரை எந்த விஜய் படத்துக்கும் இல்லாத அளவுக்கு ஆகியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தமிழகத்தில் 400 அரங்குகளில் வெளியாகும் இந்தப் படம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் கணிசமான அரங்குகளில் வெளியாகிறது.

சர்வதேச அளவில் 50-க்கும் அதிகமான நாடுகளில் இந்தப் படம் வெளியாவதாக இதன் வெளியீட்டாளர்களான ஏ அன்ட் பி குரூப் அறிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கானா, கென்யா, உகான்டா, ஜாம்பியா, டான்சானியா, போட்ஸ்வானா, காங்கோ, எத்தியோப்பியா, ருவாண்டா போன்ற நாடுகளில் பைரவாவை வெளியிடுகிறார்களாம்.

அல்பேனியா, உக்ரைன், மெக்ஸிகோ, லிதுவேனியா, லாட்வியா, போலந்து மற்றும் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ போன்ற நாடுகளிலும் பைரவா வெளியாவதாகத் தெரிவித்துள்ளனர்.

English summary
A&P Group, the distributors of Vijay's Bairava has annopunced that they released the movie in 55 countries.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil