»   »  இன்று உலகம் முழுவதும் 1000 அரங்குகளுக்கு மேல் பைரவா ரிலீஸ்!

இன்று உலகம் முழுவதும் 1000 அரங்குகளுக்கு மேல் பைரவா ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் பைரவா படம் இன்று உலகம் முழுவதும் 1000 ப்ளஸ் அரங்குகளில் வெளியாகியுள்ளது.

இன்று காலை 5 மணிக்கு சென்னையில் இந்தப் படத்தின் சிறப்புக்காட்சி நடந்தது.


விஜய் - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படத்தை பரதன் இயக்கியுள்ளார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.


Bairava released in 1000 plus screens worldwide

இந்தப் படம் பொங்கல் ஸ்பெஷலாக இன்று உலகெங்கும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் பைரவா ரிலீசாகியுள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் இந்தப் படம் 200 க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகியுள்ளது.


வெளிநாடுகளில் 300 அரங்குகளுக்கு மேல் பைரவா ரிலீசாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மட்டுமே 200 அரங்குகளுக்கும் மேல் இந்தப் படம் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் காலை 5 மணிக்கு இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற்றது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் இந்தப் படத்தை பார்த்து ரசித்தனர்.


நாளையிலிருந்து பொங்கல் விடுமுறை தொடங்கிவிடும் என்பதால், படம் எப்படி இருந்தாலும் இன்னும் ஒரு வாரத்துக்கு நல்ல கூட்டம் வரும். எனவே போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை விநியோகஸ்தர்களிடம் தெரிகிறது.

English summary
Vijay's Pongal Release Bairava is releasing in 1000 plus theaters all over the world.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil