»   »  விஜய்யின் முந்தைய வசூல் சாதனைகளை பைரவா முறியடிக்கும்! - அமெரிக்க விநியோகஸ்தர்

விஜய்யின் முந்தைய வசூல் சாதனைகளை பைரவா முறியடிக்கும்! - அமெரிக்க விநியோகஸ்தர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடித்து வரும் பைரவா படத்தை அமெரிக்காவில் மூன்று நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.

தெறி படம் அமெரிக்காவில் நல்ல வசூலை ஈட்டியதால், பைரவா வுக்கும் நல்ல எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

Bairava US distribution sold out

இந்தப் படத்தை அமெரிக்காவில் வெளியிடும் உரிமையை பி அன்ட் பி, 8 கே மைல்ஸ் மற்றும் டென்ட்கொட்டா ஆகிய மூன்று நிறுவனங்கள் பெற்றுள்ளன. தெறியை விட அதிக விலைக்கு இந்தப் படத்தை வாங்கியுள்ளனராம்.

ரஜினி நடிக்காத ஒரு படத்தின் அமெரிக்க உரிமை இந்த அளவுக்கு விலை போயிருக்கிறதென்றால் அது விஜய்யின் பைரவாதான் என்கிறார் 8 கே மைல்ஸ் நிறுவனத்தின் சுரேஷ் சாரி.

விஜய் படங்களின் முந்தைய வசூல் சாதனைகளை பைரவா முறியடிக்கும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் சுரேஷ் சாரி.

விஜயா நிறுவனத்தின் தயாரிப்பான பைரவாவை பரதன் இயக்கியுள்ளார். பொங்கலுக்கு இந்தப் படம் உலகெங்கும் வெளியாகிறது.

English summary
8K Miles Media, B&B Entertainment and Tentkotta- a legal and popular Tamil films’ streaming portal, will be releasing Vijay's 60th Movie Bairava in USA

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil