»   »  பைரவா படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

பைரவா படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பைரவா படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய்யின் பைரவா படம் இன்று 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகியுள்ளது. முன்னதாக பைரவா படத்திற்கு தியேட்டர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


Bairavaa case: Chennai HC issues order

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 12-ம் தேதிக்குள் படத் தயாரிப்பாளர், தமிழக அரசு, திரையரங்கு அதிபர்கள் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது. மேலும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அது பற்றி புகார் அளிக்கக்கூடிய விவரத்தையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.


இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Chennai high court has ordered theatre owners in Tamil Nadu not to charge more for Vijay's Bairavaa tickets.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil