»   »  விஜய்யின் பைரவாவுக்கும், கபாலிக்கும் இடையே என்ன ஒற்றுமை?#bairavaa

விஜய்யின் பைரவாவுக்கும், கபாலிக்கும் இடையே என்ன ஒற்றுமை?#bairavaa

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளைய தளபதி விஜய்யின் பைரவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கும், கபாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கும் தொடர்பு உள்ளது.

விஜய்யை வைத்து அழகிய தமிழ் மகன் படத்தை எடுத்த பரதன் தற்போது பைரவா படத்தை இயக்கி வருகிறார். பைரவா விஜய்யின் 60வது படம். படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட்டது.

படக்குழுவினர் வெளியிடும் முன்பே ஃபர்ஸ்ட் லுக்கும், தலைப்பும் கசிந்தது தனிக் கதை.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது. பைரவா ஃபர்ஸ்ட் லுக்கும் விநாயகர் சதுர்த்தி அன்றே ரிலீஸாகி கபாலியை போன்று அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

கெத்து

கெத்து

கபாலி ஃபர்ஸ்ட் லுக்கில் ரஜினிகாந்த் கோட் சூட், கூலிங் கிளாஸில் ஸ்டைலாக அமர்ந்தபடி போஸ் கொடுத்திருப்பார். பைரவாவில் விஜய்யும் கோட் சூட், கூலிங் கிளாஸில் கெத்தாகவே போஸ் கொடுத்துள்ளார்.

மாஸ்

மாஸ்

கபாலி ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து ரசிகர்கள் எப்படி அது மாஸாக, கெத்தாக உள்ளதாக தெரிவித்தார்களோ பைரவாவை பார்த்தும் அதே தான் கூறியுள்ளனர்.

தியேட்டர் உரிமை

தியேட்டர் உரிமை

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பைரவா ரிலீஸாக உள்ளது. பைரவா படத்தின் அமெரிக்க தியேட்டர் உரிமை ரூ.3.30 கோடிக்கும், கேரளா தியேட்டர் உரிமை ரூ.6.25 கோடிக்கும் போயுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய்யின் தோரணையை பார்த்தால் அவர் தாதாவாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

English summary
Vijay starrer Bairavaa's first look poster was released on Vinayagar Chathurthi just like Rajinikanth's Kabali first look.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil