»   »  ஃபேஸ்புக் லைவ், ட்விட்டரில் வெளியான 'பைரவா': படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி

ஃபேஸ்புக் லைவ், ட்விட்டரில் வெளியான 'பைரவா': படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் பைரவா படம் அதற்குள் ஃபேஸ்புக் லைவ், ட்விட்டரில் வெளியாகிவிட்டது.

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்து வருகிறார்கள். தளபதி பொங்கல்டா என்று விஜய் ரசிகர்கள் காலரை தூக்கிவிடுகிறார்கள்.


Bairavaa leaked on Facebook live, twitter

இந்நிலையில் பைரவா படம் ஃபேஸ்புக் லைவில் வெளியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வெளிநாடுகளில் நேற்று திரையிடப்பட்ட ப்ரீமியர் காட்சியின்போது தான் யாரோ படத்தை வீடியோ எடுத்து ஃபேஸ்புக் லைவில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. படம் இந்தியாவில் வெளியாகும் முன்பே ஃபேஸ்புக் லைவில் வந்துவிட்டது.


இது தவிர பிட்டு பிட்டாக ட்விட்டரிலும் முழுப் படமும் வெளியாகியுள்ளது.


திரையுலகினர் படாதபாடு பட்டு ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்தால் திருட்டு டிவி, ஃபேஸ்புக் லைவில் படத்தை வெளியிட்டு அவர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்.


திருட்டு டிவிடியை ஒழிக்க போராடும் திரையுலகினருக்கு ஃபேஸ்புக் லைவ் பெரும் தலைவலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay starrer Bairavaa has hit the screens today. Shocking the moving is leaked on facebook live and twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil