»   »  கேரளாவில் வசூலில் புதிய சாதனை: பட்டையை கிளப்பிய பைரவா #வர்லாம்வர்லாம்வா

கேரளாவில் வசூலில் புதிய சாதனை: பட்டையை கிளப்பிய பைரவா #வர்லாம்வர்லாம்வா

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தரபுரம்: பைரவா படம் ரிலீஸான அன்று கேரளாவில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படம் கடந்த 12ம் தேதி 55 நாடுகளில் பிரமாண்டமாக ரிலீஸானது. தளபதி ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது.

விஜய்க்கு கட்அவுட், பேனர்கள் வைத்து ரசிகர்கள் அமர்க்களப்படுத்திவிட்டனர்.

கேரளா

கேரளா

கேரளாவில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஏரீஸ்பிளக்ஸ் திரையரங்கில் பைரவா ரிலீஸான அன்று மட்டும் ரூ.10.4 லட்சம் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.

பைரவா

பைரவா

ஏரீஸ்பிளக்ஸ் தியேட்டரில் மலையாளம் அல்லாத பிற மொழி படம் ஒன்று ரிலீஸான அன்று ரூ. 10.4 லட்சம் வசூலித்துள்ளது இதுவே முதல் முறை ஆகும். அந்த தியேட்டரில் ரிலீஸான அன்று அதிகம் வசூலித்த மலையாள படம் மோகன்லாலின் புலிமுருகன். புலிமுருகன் ரிலீஸான அன்று ஏரீஸ்பிளக்ஸில் ரூ. 8.5 லட்சம் வசூலித்தது.

முதல் நாள் வசூல்

பைரவா படத்தின் வினியோகஸ்தரான ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இளையதளபதி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் முதல் நாள் வசூல் விபரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறோம். வசூல் ரூ.16.61 கோடி #BairavaaRecordOpening என தெரிவித்துள்ளது.

தெறி

தெறி

விஜய்யின் தெறி படம் ரிலீஸான அன்று ரூ.13 கோடி வசூலித்திருந்தது. அந்த சாதனையை தற்போது பைரவா முறியடித்துள்ளது. பைரவா ரிலீஸான அன்று சென்னையில் மட்டும் ரூ. 92 லட்சம் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay's Bairavaa has collected Rs. 10.4 lakh on the opening day at the prestigious Ariesplex in Trivandrum. It is the first non malayalam movie that has collected this much.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil