»   »  தமிழ், தெலுங்கிலும் பஜிராவ் மஸ்தானி... சஞ்சய் லீலா பன்சாலியின் கனவுப் படம்!

தமிழ், தெலுங்கிலும் பஜிராவ் மஸ்தானி... சஞ்சய் லீலா பன்சாலியின் கனவுப் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சஞ்சய் லீலா பன்சாலியின் பஜிராவ் மஸ்தானி படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.

ஈரோஸ் இன்டர்நேஷனல், பன்சாலி புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள பிரம்மாண்டமான படைப்பு "பஜிராவ் மஸ்தானி".

இத்திரைப்படம் வருகிற டிசம்பர் பதினெட்டாம் தேதி உலகமுழுவதும் வெளியாக உள்ளது.

தமிழ் - தெலுங்கில்

தமிழ் - தெலுங்கில்

தென்னிந்திய ரசிகர்களை கவரும் வகையில் இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

மதன் கார்க்கி

மதன் கார்க்கி

தமிழில் பாகுபலி, எந்திரன் ஆகிய பிரம்மாண்டமான படைப்புகளுக்கு பாடல்கள் மற்றும் வசனம் எழுதிய பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்க்கி அவர்கள் இப்படத்தின் தமிழ் பதிப்பிலும். தெலுங்கு ஸ்ரீமந்துடு மற்றும் பாகுபலி ஆகிய படங்களுக்கு பாடல்கள் மற்றும் வசனம் எழுதிய ராமாஜோகையா சாஸ்திரி தெலுங்கு பதிப்பிலும் பணியாற்றியுள்ளனர்.

பன்சாலி

பன்சாலி

படம் பல்வேறு மொழிகளில் வெளியாவது குறித்து இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி கூறுகையில், "பஜிராவ் மஸ்தானி நான் பல நாட்களாக சொல்ல நினைத்த கதை. இத்திரைப்படத்தை தென்னிந்தியாவைச் சேர்ந்த ரசிகர்கள் அவர்களுடைய சொந்த மொழியில் பார்க்க இருக்கிறார்கள். இத்திரைப்படம் என்னுடைய பலநாள் கனவு. நான் இந்த கனவோடு பலநாட்கள் வாழ்ந்திருக்கிறேன். மொழிகளைக் கடந்து என்னை போல் ரசிகர்களும் இந்த கனவோடு வாழவேண்டும்," என்றார்.

ஈராஸ்

ஈராஸ்

ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் நந்து அகுஜா கூறுகையில், "தென்னிந்திய சந்தையில் இதே கதையம்சத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளன. இது தான் பஜிராவ் மஸ்தானி திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யத் தூண்டியது.

உலகளாவிய படம்

உலகளாவிய படம்

பஜிராவ் மஸ்தானி திரைப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. பஜிராவ் மஸ்தானி இந்தியாவில் இருந்து வெளிவரும் உலகளாவிய திரைப்படமாக இருக்கும்.

மிகச்சிறந்த கிளாசிக் திரைப்படங்களை எடுத்து பத்மஸ்ரீ விருது பெற்ற இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இத்திரைப்படத்தை நுணுக்கமான கதை கரு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களோடு சேர்த்து மிகச்சிறந்த முறையில் உருவாக்கியுள்ளார்.

ரன்வீர் சிங் - தீபிகா

ரன்வீர் சிங் - தீபிகா

இத்திரைப்படத்தில் ரன்வீர் சிங் , தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். பஜிரோ மஸ்தானி ஒரு படைப்பாளியின் வெகுநாள் கனவு. இத்திரைப்படம் ரசிகர்களை காதல், தேசம், போர், செழுமை போன்ற பல்வேறு இடங்களுக்கு கடத்தி செல்லவல்லது .

ஈரோஸ் இன்டர்நேஷனல் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலியின் பஜிராவ் மஸ்தானி வருகிற டிசம்பர் பதினெட்டாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

English summary
Eros International and Sanjay Leela Bhansali’s forthcoming magnum opus Bajirao Mastani, slated to release on December 18 worldwide, will also release in Tamil and Telugu languages.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil