»   »  அமெரிக்காவில் பஜ்ரங்கி பாய்ஜானை மிரட்டும் பாகுபலி

அமெரிக்காவில் பஜ்ரங்கி பாய்ஜானை மிரட்டும் பாகுபலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அமெரிக்காவில் உள்ளி தியேட்டர்களில் சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் ரிலீஸாகியும் பாகுபலி படத்தின் வசூலில் சிறிதளவு கூட பாதிப்பு ஏற்படவில்லை.

Select City
Buy Baahubali - The Beginning (Tamil) (U/A) Tickets

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி படம் இந்தியா மட்டும் இன்றி அமெரிக்காவிலும் வசூலில் சாதனை செய்து வருகிறது.


படம் ரிலீஸான 10 நாட்களில் ரூ. 355 கோடி வசூல் செய்துள்ளது.


அமெரிக்கா

அமெரிக்கா

ரூ.240 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பாகுபலி படம் அமெரிக்காவிலும் சக்கை போடு போடுகிறது. அமெரிக்காவில் பாகுபலி ரூ.40.27 கோடி வசூல் செய்துள்ளது.


பஜ்ரங்கி பாய்ஜான்

பஜ்ரங்கி பாய்ஜான்

சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் படம் அமெரிக்காவில் ரிலீஸாகியுள்ளது. இருப்பினும் அந்த படத்தால் பாகுபலியின் வசூல் பாதிக்கவில்லை. வார இறுதி நாட்களில் பாகுபலி படத்தை பார்க்க மக்கள் தியேட்டர்களில் முந்தியடித்துள்ளனர்.


சல்மான்

சல்மான்

பாகுபலி படத்தின் வசூலை பார்த்து பயமாக உள்ளதாக சல்மான் கானே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பஜ்ரங்கி பாய்ஜான் ரிலீஸான 5 நாட்களில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது.


இருப்பினும்

இருப்பினும்

சல்மான் கானின் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இருப்பினும் அதனால் பாகுபலி படத்தின் வசூல் அருகில் கூட வர முடியவில்லை.


English summary
Though Salman Khan starrer Bajrangi Bhaijaan has collected Rs. 150 crores, it is not able to beat Baahubali in the USA.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil