»   »  6 புதிய படங்களுடன் "பக்ரீத்"தைக் கொண்டாடும் தமிழ் சினிமா

6 புதிய படங்களுடன் "பக்ரீத்"தைக் கொண்டாடும் தமிழ் சினிமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பக்ரீத் பண்டிகையான இன்று வழக்கம் போல தமிழ் சினிமாவில் 6 புதிய படங்கள் வெளியாகி இருக்கின்றன. பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இன்று வெளியாகவில்லை.

குற்றம் கடிதல், கிருமி, உனக்கென்ன வேணும் சொல்லு, காதல் அகதி, திருட்டு விசிடி மற்றும் ஜிப்பா ஜிமிக்கி இந்த 6 படங்களில் குற்றம் கடிதல் மற்றும் கிருமி ஆகிய படங்கள் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.


இந்த 6 படங்களுமே சிறு பட்ஜெட்டில் தயாரான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படங்களில் நடித்தவர்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் படம் பூர்த்தி செய்யுமா? போன்ற விவரங்களை கீழே காணலாம்.


குற்றம் கடிதல்

குற்றம் கடிதல்

ஆசிரியர் - மாணவர்களை மையக்கருவாக அமைத்து படத்தை எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரம்மா. நடந்து முடிந்த 12-வது சென்னை சர்வதேசப் பட விழாவில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை வென்றிருக்கிறது. அதற்கு முன்பு இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடத் தேர்வான ஒரே படம் என்ற கம்பீரத்தையும் பெற்றிருக்கிறது குற்றம் கடிதல். இந்தப் படத்திற்க்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.


கிருமி

கிருமி

நாயகன் கதிர், நாயகி ரேஷ்மி மேனன் மற்றும் சார்லி ஆகியோரின் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் கிருமி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லராக கிருமி திரைப்படத்தை எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் அனுசரண். காக்கா முட்டை மணிகண்டன் திரைக்கதை எழுதியிருப்பது, ரஜினியின் கையெழுத்துடன் போஸ்டர் வெளியானது, திரையுலகினரின் பாராட்டுகள் மற்றும் உலகத் திரைப்படவிழாவில் படம் கலந்து கொள்வது ஆகியவை "கிருமி"க்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றன.


ஜிப்பா ஜிமிக்கி

ஜிப்பா ஜிமிக்கி

படத்தின் இயக்குநர் ராஜசேகர் தனது மகன் கிரிஷை இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகபடுத்தியிருக்கிறார். கிரிஷிற்கு ஜோடியாக குஷ்பூ என்றப் புதுமுகத்தை நடிக்க வைத்திருக்கின்றனர். நான் கடவுள் ராஜேந்திரன் காமெடி நடிகராக படம் முழுவதும் நடித்திருக்கிறார் " ஜிப்பா போட்ட மைனரு ஜிமிக்கி போட்ட பெண்டிரு" என்று மாட்டு வண்டியில் ராஜேந்திரன் பாடும் பாடல் சற்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.


உனக்கென்ன வேணும் சொல்லு

உனக்கென்ன வேணும் சொல்லு

பேய்ப் படங்களின் வரிசையில் இன்று புதிதாக இணைந்திருக்கும் படம் உனக்கென்ன வேணும். முதலில் டெய்சி என்று பெயர் வைத்துவிட்டு பின்னர் அஜீத்தின் பிரபல பாடல் வரியை தலைப்பாக வைத்திருக்கின்றனர் படக்குழுவினர்.அமெரிக்காவில் சினிமா கலை பயின்ற ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கியுள்ள திரைப்படம் "உனக்கென்ன வேணும் சொல்லு'. நிறைய குறும்படங்களைத் தமிழ், ஆங்கிலத்தில் இயக்கி அனுபவம் பெற்றவர். அதற்காக சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். அவருக்கு 23 வயதிலேயே முதல் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அனு, மைம் கோபி, தீபக் பரமேஷ், ஜாக்குலின் பிரகாஷ், குணாளன், மோகன், மோர்ணா, அனிதா போன்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். படம் ரசிகர்களை எந்தளவிற்கு ஈர்த்தது என்பது நாளை தெரியவரும்.


திருட்டு விசிடி

திருட்டு விசிடி

பப்பட் ஷோ கிரியேஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் சந்திரன், மோஹன் ஆகியோர் தயாரித்திருக்கும் படம் திருட்டு விசிடி. இன்று வெளியாகியிருக்கும் இந்த படத்திற்கு ஜெகதீஸ் ஒளிப்பதிவு செய்ய,ஜித்தின் ரோஷன் இசை அமைத்திருக்கிறார்.தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பின்னர் ‘காதல்' திரைப்படத்தில் பரத்தின் நண்பராக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ‘காதல்' சுகுமார் தற்போது ‘திருட்டு விசிடி' என்ற படத்தின் மூலம் இயக்குநராக மாறியிருக்கிறார்.


காதல் அகதி

காதல் அகதி

ராமய்யா சினி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஓசூர் எம்.ராமய்யா தயாரித்திரிக்கும் படம் காதல் அகதி.ஹரிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ஆயிஷா என்ற புதுமுகம் அறிமுகமாகியிருக்கிறார் இவர்களுடன் பாண்டியராஜன், பிளாக்பாண்டி, தேவதர்ஷினி, சிங்கமுத்து, மைசூர் மஞ்சுளா, மனோகர், திருச்சி பாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர். இன்னொரு நாயகன், நாயகியாக சுதர்சன் மற்றும் மம்தா நடித்திருக்கும் இந்தப் படத்தை ஷாமி திருமலை இயக்கியிருக்கிறார்.


அடுத்த வாரம் முழுக்க பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமிக்கவிருக்கும் நிலையில் மேலே பார்த்த 6 படங்களில் எந்தப் படம் இந்த 1 வார காலத்திற்குள் அதிக வசூலை ஈட்டப் போகிறது என்பது தெரியவில்லை. எனினும் இன்னும் ஒருசில தினங்களில் படத்தின் முடிவுகள் தெரிந்து விடும் என்பதால் வழக்கம் போல பொறுத்திருந்து பார்க்கலாம்.English summary
Bakrid Special: The Following Tamil Movies Released today Kirumi, Kuttram Kadithal, Unakkenna Venum Sollu, Jippa Jimikki, Kathal Agathi and Thiruttuvcd.
Please Wait while comments are loading...