»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

இயக்குனர் பாலாவுக்கு அடுத்த மாதம் 5ம் தேதி திருமணம் நடக்கிறது.

சேது, நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கமாய் திரும்பி நிற்கச் செய்தவர் பாலா. நந்தா படத்தில் லைலா நடித்தபோது, லைலாவுக்கும், பாலாவுக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதையெல்லாம் பாலா மறுத்தே வந்தார்.

இப்போது பாலாவுக்கும் அவரது அக்காள் கலாவதியின் மகளான முத்துமலருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளத்தில் வசித்து வரும் மகாதேவன்- கலாவதி தம்பதியினரும் பாலாவின் பெற்றோரும் பேசி திருமணத்தை நிச்சயம் செய்துள்ளனர்.

மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மண்டபத்தில் அடுத்த மாதம் 5ம் தேதி திருமணம் நடக்கிறது. சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி எதற்கும் பாலா ஏற்பாடு செய்யவில்லை.

அரசியல் மற்றும் சினிமா உலக பிரமுகர்கள் அனைவருக்கும் இயக்குனர் பாலா நேரில் சென்று அழைப்பிதழ்களை கொடுத்து வருகிறார். பாலாவின் தூரத்து உறவினர் தான் பொதுப் பணித்துறை அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...